தம்பி ராமையா என்னை அடித்தார் ; கண்கலங்கிய கும்கி பட நடிகர்….

By Deepika

Published on:

1999 ஆம் ஆண்டு வெளியான மலபார் போலீஸ் படம் மூலம் அறிமுகமானவர் தம்பி ராமையா. ஆரம்பத்தில் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நடித்து வந்தார். மனுநீதி, கோவில்பட்டி வீரலட்சுமி, அருள், ஜோர், கோடம்பாக்கம், ஆறு, கோவை பிரதர்ஸ், இம்சை அரசன் 23-ம் புலிகேசி, சில்லுனு ஒரு காதல், தனி ஒருவன், சாட்டை, விஸ்வாசம், விநோதய சித்தம் சமீபத்தில் வெளியான லால் சலாம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

Thambi ramaiah in kumki

பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக அறிமுகமான கும்கி படத்தில் விக்ரம் பிரபுவின் மாமாவாக நடித்திருப்பார். விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.இப்படி பல படங்களில் நடித்த தம்பி ராமையாவுக்கு ரசிகர்கள் படை உண்டு. அவரின் எதார்த்த பேச்சும், நடிப்பும் தான் அதற்கு காரணம்.

   

ஆனால் அவருக்கு உள்ளேயும் ஒரு மிருகம் இருந்துள்ளது சமரர்பதில் தான் வெளியே தெரிய வந்துள்ளது. ஆம், உங்களில் பலருக்கு கும்கி படத்தில் வரும் ஜோசியர் கதாபாத்திரம் நினைவு இருக்கலாம். 50 வயது வரை கஷ்டப்பட்டு, கேவலப்பட்டு போவாய் அதன் பின் அதுவே பழகிடும் என்பார். அவர் வேறு யாரும் அல்ல தம்பி ராமையாவின் ட்ரைவர் சுப்பையா தான். அவர் அளித்துள்ள பேட்டி தான் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Thambi ramaiah in kumki

அவர் கூறுகையில், அந்த ஜோசியர் கதாபாத்திரத்துக்கு பெண் ஜோசியர் ஒருவரை புக் செய்திருந்த நிலையில், கடைசி நேரத்தில் பிரபு சாலமன் ஆம்பள ஜோசியர் தான் வேண்டும் என உறுதியாகக் கூறிவிட, பல ஆண்டுகளாக சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக தம்பி ராமையாவிடம் கார் டிரைவராக வேலை பார்த்து வந்த என்னை அந்த காட்சியில் நடிக்க வைத்தனர். நான் ஒரே டேக்கில் நடித்து முடித்துவிட்டேன். எல்லாரும் என்னை பாராட்டினார்கள்.

ஆனால் தம்பி ராமையாவுக்கு அது பிடிக்கவில்லை, என்னை விட நல்லா நடிப்பியான்னு அதே இடத்தில் 5 விரல் கன்னத்தில் பதியும்படி அறைந்து விட்டார். நான் நல்லா நடிச்சு எல்லோரிடமும் கைதட்டல் வாங்கியதும் பொறாமை தாங்கவில்லை. அந்த காட்சியிலேயே அவர் என்னை அடிப்பது போன்ற சீன் இருக்கும். அதில், அவர் உண்மையாகவே என்னை தாக்கினார். தலையில், அடிபட்டு ரத்தம் வந்தது. அந்த ஷாட் முடிந்தும் அவர் ஓங்கி கன்னத்தில் இனிமே நடிப்பியான்னு அடிச்சதை எப்போதும் மறக்க மாட்டேன் என பேசியுள்ளார்.

subaiah about thambi ramaiah

இதைக்கேட்ட சினிமா ரசிகர்கள் தம்பி ராமையா இப்படிப்பட்டவரா என அனைவரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். சினிமாவில் தன்னுடன் இருக்கும் நபர்கள் வளரவேண்டும் என நினைப்பவர்கள் ஒருபக்கம் என்றால் தன்னுடன் இருப்பவர்கள் பெரிய ஆள் ஆகி விடக்கூடாது என நினைப்பவர்கள் அதிகம் இருக்கிறார்கள். வடிவேலு இப்படிப்பட்டவர் என நமக்கு தெரியும், ஆனால் இதில் தம்பி ராமையாவும் அடங்குவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

author avatar
Deepika