பிரபல வில்லன் நடிகரான டேனியல் பாலாஜிக்கு நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் கொட்டிவாக்கத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது உடல் புரசைவாக்கத்தில் இருக்கும் அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இயக்குனர்கள் கௌதம் வாசுதேவன் மேனன், வெற்றிமாறன் உள்ளிட்டார் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவர் மறைந்த நடிகர் முரளியின் உடன்பிறவா சகோதரர் ஆவார்.
கடந்த 2002-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் படத்தின் மூலம் டேனியல் பாலாஜி திரைத்துறையில் என்ட்ரி கொடுத்தார். சித்தி, அலைகள் ஆகிய 2 சூப்பர் ஹிட் சீரியல்களில் டேனியல் பாலாஜி நடித்துள்ளார்.டேனியல் பாலாஜி பொல்லாதவன், வேட்டையாடு விளையாடு, காக்க காக்க, பைரவா, வடசென்னை ஆகிய படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இந்த நிலையில் முரளியின் மகனும் நடிகருமான அதர்வா தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். அதில் வாழ்வில் நமக்கானவர்கள் தான் முக்கியம் என நினைக்க வைத்த மற்றொரு நாள் இது. நாம் இன்னும் அதிக நேரம் ஒன்றாக செலவிட்டிருக்கலாம் என தோன்றுகிறது. Rest in peace பாலாஜி சித்தப்பா என பதிவிட்டுள்ளார்.
It’s one of those days when you understand that “only” time and people we hitch ourselves through life matters the most. I Wish we got to spend more time together. REST IN PEACE Balaji Chithappa. ???? pic.twitter.com/bzelNGDYHY
— Atharvaa (@Atharvaamurali) March 30, 2024