இந்திய சினிமாவின் முதல் நடிகை… சர்ச்சைக்குரிய லிப் லாக் காட்சியில் நடித்த தேவிகா ராணி!

By vinoth on மார்ச் 30, 2024

Spread the love

இந்திய சினிமாவிற்கு வயது 100 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. மௌனப் பட காலத்தில் இருந்து இந்தியாவில் சினிமாக்கள் தயாரிக்கப்படுகின்றன. மௌனப் படக் காலத்தில் பெண்கள் நடிக்கத் தயங்கியதால் ஆண்களே பெண் வேடமிட்டு நடித்தனர்.

அந்த காலத்தில் துணிச்சலாக நடித்த பெண் நடிகை என்ற பெருமைக்குரியவர் தேவிகா ராணி. ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தை பூர்வீகமாக கொண்ட இவர் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர். தனது 9வது வயதிலேயிலே பிரட்டனுக்கு படிப்புக்காக அனுப்பி வைக்க பட்டார். அங்கே படித்து இந்தியா திரும்பிய தேவிகா ராணி திரைப்பட தயாரிப்பாளர் ஹிமான்ஷு ராய் என்பவரை சந்திக்கிறார். அவரின் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய போது இருவருக்கும் இடையில் காதல் மலர திருமணம் செய்துகொள்கின்றனர்.

   

1933 ஆம் ஆண்டு ஆங்கிலம், தமிழ் மொழியில் உருவான கர்மா என்ற படத்தில் தேவிகா ராணியை ஹீரோயினாக நடிக்க வைத்தார் ஹிமான்ஷு ராய். அந்த படத்தில் கதாநாயகனாக நடித்த ஹிமான்ஷு ராய். இதன் மூலம் இந்திய சினிமாவில் பெண் கதாபாத்திரம் தோன்றியது இந்த படத்தில் என கூறப்படுகிறது. இங்கிலாந்தில் ப்ரீமியர் செய்யப்பட்ட இந்த படம் இந்தியாவில் தோல்வியை தழுவியது. இந்த படத்தில் தேவிகா ராணியும் ஹிமான்ஷு ராயும் உதட்டில் முத்தமிடுவது போன்ற காட்சி இடம்பெற்றது. இந்த காட்சி இந்தியாவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

   

தொடர்ச்சியாக 1940கள் வரை திரைப்படங்களில் நடித்தார் தேவிகா ராணி. அந்த காலகட்டத்தில் அசோக் குமாருடன் இவர் இணைந்து நடித்த படங்கள் பரவலாக பேசப்பட்டது. ஆனால் ஹிமான்ஷு ராயின் தோல்விக்குப் பிறகு தேவிகா ராணி தயாரித்த படங்கள் தோல்விப் படங்களாக அமைந்தன.

 

பின்னர் திரைப்பட தயாரிப்பையும் நிறுத்திவிட்டு ரஷ்யாவை சேர்ந்த பெயிண்டரான ஸ்வெடோஸ்லாவ் ரோரிச் என்பவரை திருமணம் செய்து கொண்டு பெங்களுருவில் செட்டிலானார். இவருக்கு இந்திய அரசு தாதா சாகேப் பால்கே மற்றும் பத்மஸ்ரீ ஆகிய விருதுகளை வழங்கி கௌரவித்தது.