பிரபல வில்லன் நடிகரான டேனியல் பாலாஜிக்கு நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் கொட்டிவாக்கத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் புரசைவாக்கத்தில் இருக்கும் அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.

இயக்குனர்கள் கௌதம் வாசுதேவன் மேனன், வெற்றிமாறன் உள்ளிட்டார் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவர் மறைந்த நடிகர் முரளியின் உடன்பிறவா சகோதரர் ஆவார். 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் படத்தின் மூலம் டேனியல் பாலாஜி திரைத்துறையில் என்ட்ரி கொடுத்தார். சித்தி, அலைகள் ஆகிய 2 சூப்பர் ஹிட் சீரியல்களில் டேனியல் பாலாஜி நடித்துள்ளார்.

டேனியல் பாலாஜி பொல்லாதவன் படத்தில் ரவி, வேட்டையாடு விளையாடு படத்தில் அமுதன் ஆகிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார். காக்க காக்க, பைரவா, வடசென்னை ஆகிய படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

டேனியல் பாலாஜிக்கு படம் எடுக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்தது. இதற்காக பல்வேறு கதைகளை எழுதி வைத்திருந்தாராம். ஆனால் அந்த ஆசை நிறைவேறாமலேயே 48 வயதான டேனியல் பாலாஜி இறந்துவிட்டார். இது அவரது ரசிகர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

