ஏ.ஆர்.ரஹ்மான் VS வைரமுத்து…. இனி சேர வாய்ப்பில்லையா..? நடந்தது என்ன..?

By Deepika on மார்ச் 30, 2024

Spread the love

மக்கள் விரும்பிய ஒரு கூட்டணி என்றால் அது வைரமுத்து ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி தான். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமான ரோஜா படத்தில் வைரமுத்து தான் அனைத்து பாடல்களுக்கும் வரிகள் எழுதினார். ரோஜா படம் மட்டுமல்ல ரோஜா ஆல்பமும் மிகப்பெரிய ஹிட்.

Vairamuthu and AR rahman

இவர்களின் கூட்டணி தொடர்ந்தது, திருடா திருடா, ஜென்டில்மேன், காதலன், டூயட் என தொடங்கி இறுதியாக செக்க சிவந்த வானம் வரை கிட்டத்தட்ட 30 வருடங்களாக இவர்கள் சேர்ந்து பயணித்தார்கள். வைரமுத்து பாட்டு எழுதி ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க வேண்டும் என பல இயக்குனர்கள் போட்டி போட்டு க்யூவில் நின்றார்கள். யார் கண் பட்டதோ தெரியவில்லை, இனி இவர்கள் இருவரும் சேர்ந்து பயணிக்க போவதில்லை என்ற நிலைமை வந்து விட்டது.

   
   

Vairamuthu will not be a part of ponniyin selvan

 

ஆம், இது பொன்னியின் செல்வன் ஆரம்பிக்கும்போது வெளிப்பட்டது. பொன்னியின் செல்வன் குழுவை அறிவிக்கும்போது அதில் வைரமுத்து பெயர் இடம் பெறவில்லை. இது அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது, பொன்னியின் செல்வன் இந்திய சினிமாவுக்கே முக்கியமான படம் அதில் வைரமுத்து இல்லாமல் எப்படி என பலரும் கேள்வி எழுப்பினர். இது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வாய் திறக்கவில்லை.

ARR Rahman about vairamuthu in ps

இதுபற்றி ஏ.ஆர்.ரஹ்மான் ஒருமுறை பேசும்போது, தமிழில் பல பாடலாசிரியர்கள் உண்டு, அவர்களுக்கும் வாய்ப்பு தரவேண்டும் என நான் நினைக்கிறேன். ஒருவருடன் இதனை ஆண்டுகள் பயணித்தோம், இப்போது புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என் நினைப்பதில் தவறில்லையே என சொன்னார். இதுவே காரணமும் கூட. ஆனால் நெட்டிசன்களோ வேறு விதமான இக்கருத்துக்களை முன்வைக்கிறார்கள்.

Chinmayi and vairamuthu issue

அதாவது, வைரமுத்து மீடூ-வில் சிக்கியது தான் இதன் காரணம் என்கிறார்கள். சின்மயி வைரமுத்து மேல் அவதூறு சொன்னார். சின்மையும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார். எங்கே இப்படி அவதூறு சுமத்தப்பட்டவரை நாம் இணைத்து கொண்டால் பிரச்னை வருமோ என பயந்து தான் ஏ.ஆர்.ரஹ்மான் வைரமுத்துவை இணைத்து கொள்ளவில்லை என கூறுகின்றனர். வைரமுத்து மட்டுமல்ல, சின்மையும் பொன்னியின் செல்வனில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.