Connect with us

ஒட்டுமொத்த நீயா நானா அரங்கையும்.. கலங்க வைத்த சிறுவன்.. ஓடோடி உதவிய இசையமைப்பாளர் தமன்.. நெகிழ்ச்சி..!

CINEMA

ஒட்டுமொத்த நீயா நானா அரங்கையும்.. கலங்க வைத்த சிறுவன்.. ஓடோடி உதவிய இசையமைப்பாளர் தமன்.. நெகிழ்ச்சி..!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் நீயா நானா. இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்காகவே ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்ச்சியை தவறாமல் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் பார்த்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு தலைப்பு கொண்டு இந்த நிகழ்ச்சியில் விவாதம் நடைபெறும். அதில் எடுத்துக் கொள்ளப்படும் சில தலைப்புகள் மக்களை கவர்ந்து கலங்க வைத்து விடும்.

   

அதன்படி நேற்று நீயா நானா நிகழ்ச்சியில் படித்துக் கொண்டே வேலை பார்ப்பவர்கள் மற்றும் அவரது பெற்றோர் பங்கேற்ற விவாதம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சிறுவன் ஒருவன் தான் காலையில் மூட்டை தூக்கும் வேலை செய்வதாக கூறினார். உடலில் அவ்வளவு வலி இருக்கும், ஆனால் அதை அனைத்தையும் பொறுத்துக் கொண்டு வேலை முடிந்து 3 கிலோமீட்டர் வீட்டுக்கு நடந்தே போவேன் என்று கூறினார்.

   

 

மேலும் தன்னுடைய அம்மா அப்பாவை பற்றியும் உருக்கமாக பேசி அந்த சிறுவன் நிகழ்ச்சியில் இருந்து அனைவரையும் கண்கலங்க வைத்தார். இது தொடர்பான சில காட்சிகளும் இணையத்தில் வெளியாகி பலரையும் கலங்க வைத்தது. இந்த நிலையில் சிறுவன் பேசிய அந்த வீடியோவை பார்த்துவிட்டு இசையமைப்பாளர் தமன் சிறுவனுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார். அதாவது அந்த சிறுவனுக்கு தான் ஒரு பைக் வாங்கி தருவதாக அவர் ட்விட்டரில் கூறியுள்ளார். இவரின் இந்த உதவி மனப்பான்மையை பாராட்டி பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

 

author avatar
Nanthini

More in CINEMA

To Top