CINEMA
நீண்ட நாள் காதலரை கரம்பிடித்த எமி ஜாக்சன்.. சிம்பிளாக நடந்த இரண்டாம் திருமணம்.. வெளியான புகைப்படங்கள்..!
இங்கிலாந்தை சேர்ந்த மாடல் அழகியான எமி ஜாக்சன் தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமான நடிகையாக மாறிவிட்டார். மாடல் அழகியாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய இவர் லிவர்பூல் அழகி மற்றும் உலக பதின்வயது அழகி ஆகிய பட்டங்களை வென்றுள்ளார். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு அமெரிக்காவின் டாக்சாசில் நடைபெற்ற பதின் வயதில்ருக்கான உலக அழகி போட்டியில் முதல் பரிசு வென்றார். இவர் உலக அளவில் 18க்கும் மேற்பட்ட அழகி விருதுகளை பெற்றுள்ளார்.
இவர் முதல் முதலில் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான ஏ எல் விஜய் இயக்கிய மதராசப்பட்டினம் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டது.
முதல் திரைப்படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைத்தன. அதனைத் தொடர்ந்து தமிழில் தாண்டவம், ஐ, தங்க மகன், தெறி, 2.0 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகையாக மாறினார்.
இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த இவர் ஜார்ஜ் என்பவருடன் சில காலம் டேட்டிங்கில் இருந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். அதே ஆண்டில் செப்டம்பர் மாதம் எமி ஜாக்சனுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் 2021 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்.
இதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு ஹெட் வெஸ்டவிக் என்ற இங்கிலாந்து நடிகருடன் டேட்டிங் செய்து வந்த எமி ஜாக்சன் தற்போது எளிமையான முறையில் அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அது தொடர்பான புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.