CINEMA
அது மேல இருந்த ஆசையே போச்சு.. வீட்டில் இருக்கும் போது கமல் இப்படித்தான் இருப்பாராம்..!!
உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த 1960-ஆம் ஆண்டு ரிலீசான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரை உலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு ஏராளமான திரைப்படங்களில் கமலஹாசன் நடித்துள்ளார். கடந்த 1973 ஆம் ஆண்டு ரிலீசான அரங்கேற்றம் திரைப்படத்தில் திரை உலகில் ஹீரோவாக தனது பயணத்தை ஆரம்பித்தார்.
அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, உன்னை சுற்றும் உலகம், 16 வயதினிலே, சக்கை போடு போடு ராஜா, சட்டம் என் கையில், சிகப்பு ரோஜாக்கள், மூன்றாம் பிறை, இந்தியன், நாயகன், குணா, விக்ரம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் கமல்ஹாசன் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்த கமல்ஹாசனுக்கு இப்போது 69 வயது ஆகிறது. பொதுவாக ஒவ்வொருவருக்கும் பிடித்தமான விஷயங்களும், பிடிக்காத விஷயங்களும் இருக்கும்.
சிறு வயதில் நமக்கு பிடித்த விஷயங்கள் வளர்ந்த பிறகு பிடிக்காமல் கூட போய்விடும். அந்த வகையில் நடிகர் கமலஹாசன் எப்போதும் வீட்டில் டவலுடன் தான் இருப்பாராம். அவருக்கு டவலுடன் இருப்பது தான் மிகவும் பிடிக்குமாம். சிறுவயதில் கமல்ஹாசனுக்கு பேண்ட் சட்டை போட வேண்டும் என ஆசை இருந்தது. ஆனால் நீ சீக்கிரம் வளர்ந்து விடுவாய்.
பேண்ட் வாங்கி கொடுத்தால் வளர்ந்த பிறகு அதனை போட முடியாது என கூறி கமல்ஹாசன் பெற்றோர் அவருக்கு ட்ரவுசர்களை மட்டுமே வாங்கிக் கொடுத்துள்ளனர். அதனையே போட்டு அவருக்கு பழக்கம் ஆயிற்று. இப்போது வளர்ந்த பிறகு பேண்ட், சட்டை கமலஹாசனுக்கு பிடிக்காமலேயே போய்விட்டதாம். ஒரு நிகழ்ச்சிக்கு போகிறோம் என்றால் பேண்ட், சட்டை, கோட் சூட் அணிந்து செல்ல அவருக்கு சோம்பலாக இருக்குமாம். சிறு வயதில் தனக்கு மிகவும் பிடித்த பேண்ட் சட்டை வளர்ந்த பிறகு பிடிக்காமலேயே போய்விட்டது என கமல்ஹாசன் கூறியுள்ளாராம்.