CINEMA
“மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே”.. வித்தியாசமான லுக்கில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் ஹன்சிகா.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!
சிறுவயது முதலே சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அதிக பிரபலமாக நடிகையாக இருப்பவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு முதலே சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்து வருகின்றார்.
முதன்முதலாக ஹவா என்ற ஹிந்தி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக இவர் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து 2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் அதிகரிக்க தொடங்கியது.
ஆனால் படப்பிடிப்பின் மீது ஆர்வம் காட்டும் காரணத்தால் சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டாம் என்று முடிவு எடுத்த ஹன்சிகா மூன்று வருடங்களுக்குப் பிறகு 2007 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் மீண்டும் அறிமுகமானார்.
தேசமுத்திரா என்ற தெலுங்கு திரைப்படம் மூலமாக முதன் முதலில் நாயகியாக அறிமுகமானார். அதில் இவருக்கு ஃபிலிம் பெயர் விருது கிடைத்தது. தமிழ் சினிமாவை பொருத்தவரையில் முதல் முதலாக ஷக்கலக்க பூம்பூம் என்ற ஒரு சீரியலில் இவர் அறிமுகமானார்.
ஹிந்தியில் வெளியான இந்த சீரியல் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. எங்கேயும் காதல் என்ற திரைப்படத்தில் தான் இவர் முதல் முதலாக கதாநாயகியாக அறிமுகமானார்.
அந்தத் திரைப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மாப்பிள்ளை மற்றும் ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
பிறகு விஜய் உடன் வேலாயுதம் திரைப்படத்தில் நடித்து முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்தார். இப்படி ஒரு மார்க்கெட் இவருக்கு இருந்த போதும் கூட வெகு சீக்கிரத்தில் இந்த மார்க்கெட் குறைய தொடங்கியது.
பின்னர் வேறு வேறு மொழிகளில் எல்லாம் நடித்து வந்த ஹன்சிகா திடீரென்று சினிமாவில் பெரிதாக நடிக்காமல் காணாமல் போனார். இப்படியான நிலையில் சமீபத்தில் ஹன்சிகா தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பிறகு சினிமாவில் பெரிதாக ஆர்வம் காட்டாமல் இருந்து வரும் ஹன்சிகா இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் அன்சிகா தற்போது கையில் மல்லிகை பூ அழகிய உடை அணிந்து அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.