CINEMA
என்னை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு.. நடிகர் ரியாஸ்கான் மீது மலையாள நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு.. அதிர்ச்சியில் திரையுலகினர்..!!
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக வில்லன் நடிகராக வலம் வருபவர் ரியாஸ்கான். ரியாஸ் கான் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். பத்ரி, வின்னர், கஜினி, ஆதவன், மாஞ்சா வேலு, மம்பட்டியான் உள்ளிட்ட திரைப்படங்களில் ரியாஸ் கான் நடித்துள்ளார்.
இவரது மனைவி உமா ரியாஸ்கான். இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். உமா ரியாஸ் கான் சீரியல்களில் நடித்து வருகிறார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் ஹீரோவுக்கு அம்மாவாக நடித்து வருகிறார். ரியாஸ் கான், உமா ரியாஸ் கான் தம்பதியினருக்கு ஷாரிக் ஹாசன், சமர்த் ஹாசன் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் நடிகர் சித்திக் உள்ளிட்ட சிலர் மீது பாலியல் தொடர்பான புகார்கள் எழுந்துள்ளதால் மலையாள திரையுலகினர் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில் பிரபல மலையாள நடிகை ரேவதி சம்பத் ரியாஸ்கான் மீது பாலியல் குற்றச்சாட்டை விடுத்துள்ளார். ரியாஸ்கான் செல்போன் மூலம் ரேவதி சம்பத்தை தொடர்பு கொண்டு பாலியல் தொந்தரவு அளித்ததாக அவர் கூறியுள்ளார்.
மேலும் தன்னை தகாத உறவுக்கு அழைத்தது மட்டுமில்லாமல் தோழிகளை ஏற்பாடு செய்து தருமாறு கேட்டதாகவும் புகாரில் கூறியுள்ளார். மேலும் ரேவதி சம்பத் நடிகர் சித்திக் தன்னை ஒரு ஹோட்டல் இருக்கு அழைத்தார். அப்போது எனக்கு 21 வயது. அங்கு பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தார். கடந்த 2019-ஆம் ஆண்டு இந்த குற்றச்சாட்டை கூறியதாகவும், அப்போது யாரும் அதனை கண்டு கொள்ளவில்லை எனவும் ரேவதி சம்பத் குறிப்பிட்டுள்ளார். தற்போது ரியாஸ் கான் மீது ரேவதி அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.