TRENDING
பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு.. எப்படி பெறுவது?.. யாருக்கெல்லாம் கிடைக்கும்..?
இந்தியாவில் உஜ்வாலா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இலவச சிலிண்டர் பெறுவது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்கும் திட்டம் கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள ஏழை மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலமாக கேஸ் அடுப்பும் முதலாவது சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் பலன் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் நபர் கட்டாயம் பெண்ணாக இருக்க வேண்டும். 18 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் குடும்பத்தில் வேறு எந்த கேஸ் சிலிண்டர் இணைப்பு இருக்கக் கூடாது. எஸ்சி எஸ்டி மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா, அந்த்யோதயா அன்ன யோஜனா, தேயிலைத் தோட்ட பழங்குடியினர், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் ஆகியோர் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு ஆதார், அடையாள அட்டை, ரேஷன் கார்டு, இருப்பிட சான்றிதழ் மற்றும் வங்கி கணக்கு ஏன் ஆகியவை ஆவணமாக இருக்க வேண்டும். தனக்கு விருப்பமான எந்த ஒரு எல்பிஜி எரிவாயு விநியோகஸ்தாரரையும் விண்ணப்பதாரர் தேர்வு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முதலில் https://www.pmuy.gov.in/ujjwala2.html என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று அங்கு காட்டப்படும் இந்தியன் கேஸ், பாரத் கேஸ் மற்றும் எச்பி கேஸ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து அப்ளை பட்டனை கிளிக் செய்ய வேண்டும். அடுத்ததாக ரெஜிஸ்டர் now என்பதை கிளிக் செய்து பெயர் மற்றும் மொபைல் நம்பர் உள்ளிட்டு அனைத்து விவரங்களையும் நிரப்ப வேண்டும்.
அடுத்ததாக விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான விவரங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்த பின்னர் தேர்வு செய்த எல்பிஜி விநியோகஸ்தர் மற்றும் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். இதனுடன் தேவையான ஆவணங்கள் நகல்களை இணைக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து ஒப்புதல் சீட்டு வழங்கப்படும். அதன் பிறகு சில நாட்களில் இலவச கேஸ் அடுப்பு மற்றும் எல்பிஜி சிலிண்டர் ஆகியவை பயனாளிகளுக்கு வழங்கப்படும்.