“படத்தோட பேரு ‘பாஸ்’ இல்லை”.. இணையத்தில் வெளியான தளபதி 68 படத்தின் டைட்டில் குறித்து அர்ச்சனா கல்பாத்தி விளக்கம்..

By Begam on மார்கழி 20, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் சமீபத்தில் ‘லியோ’ திரைப்படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலில் சாதனையும் படைத்தது.  இத்திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் ‘தளபதி 68’ திரைப்படத்தில் நடிகர் விஜய் தற்பொழுது நடித்து வருகிறார்.

#image_title

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படதில் விஜய் – வெங்கட் பிரபு – யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணைகின்றனர். இத்திரைப்படத்தில் இதுவரை டபுள் ஆக்ஷனில் யாரும் செய்திடாத பல புதிய முயற்சிகளை எடுப்பதற்கு வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளாராம். அதன்படி நடிகர் விஜய் இத்திரைப்படத்தில் 19 வயது வேடத்திலும் நடிக்க உள்ளாராம்.

   
   

 

மேலும் இத்திரைப்படத்தில் நடிகை சினேகா, நடிகை லைலா, நடிகர் மைக் மோகன், நடிகர் விடிவி கணேஷ், நடிகர் யோகி பாபு என பல திரைபிரபலங்கள் நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தளபதிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தளபதி 68 திரைப்படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தென்னாபிரிக்கா, தாய்லாந்து, சென்னை என இத்திரைப்படத்தின் ஷூட்டிங் பல்வேறு சமீபத்தில் தளபதி 68 ஷூட்டிங் துருக்கியில் நடைபெற்றது. இந்நிலையில் தளபதி 68 படத்திற்கு ‘பாஸ்’ என்ற டைட்டிலை வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும். இந்த டைட்டில் அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும் எனவும் இணையத்தில் தகவல்கள் வைரலாகி சர்ச்சைக்குள்ளானது.

இதுகுறித்து அர்ச்சனா கல்பாத்தில் தனது  X தள பக்கத்தில் ‘எல்லா அப்டேட்களையும் பார்த்து வருகிறேன். உங்கள் அன்புக்கு மிக்க நன்றி. ஆனால் கொஞ்சம் காத்திருங்கள். வெங்கட் பிரபு இப்பொழுதுதான் உங்களுக்காக சமைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் கண்டிப்பாக அது ‘பாஸ்’ இல்ல. ஒரு புதிய தலைப்போடு விரைவில் சந்திப்போம்’ என்று குறிப்பிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.