“என் பசங்களோட மொத்த ஸ்கூல் பீஸையம் அவரே கட்னாரு.. அமெரிக்கால வாழும் தமிழ் ராஜா தான் நெப்போலியன்”.. நடிகர் விதார்த் உருக்கம்..

By Sumathi

Updated on:

சமீபத்தில் அமெரிக்கா சென்று, நடிகர் நெப்போலியன் பிறந்த நாள் விழாவில் கலந்துக்கொண்டு வந்திருக்கிறார் நடிகர் விதார்த். நேர்காணல் ஒன்றில் அதுபற்றி அவர் கூறியதாவது, அமெரிக்காவில் இருந்து 2 நாட்களுக்கு முன்னால தான் வந்தேன். என் கேரியர்ல அமெரிக்காவுல இப்படி ஒரு கொண்டாட்டத்தை நான் பார்க்கலை. நெப்போலியன் சார் பர்த்டேவுல 850,900 பேரை மீட் பண்ணினேன். ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அன்பறிவு ஷூட்டிங்கில தான் முதல்தடவையா நெப்போலியனை நான் மீட் பண்ணினேன். 42 நாள் ஷூட்டிங் இருந்துச்சு. அந்த 42 நாளும் காலையில அவர் ரூம்லதான் டிபன், எனக்காக வெயிட் பண்ணுவாரு. ரெண்டு பேரும் சாப்பிடுவோம். மதியம் லஞ்ச், நைட் டின்னர் அவர்கூட சாப்பிட்டேன். இப்படி பிரேக்பாஸ்ட், லஞ்ச், டின்னர் மூன்று நேரமும் அவர்கூட சாப்பிட்டேன். அப்போ நிறைய பேசியிருக்கோம்.

   

அவரோட பர்சனல் லைப் எல்லாம் என்னை ரொம்ப இன்வால்வ் பண்ணியிருக்கு. அப்புறம் என்னோட குழந்தைக்கு மொத்த பீஸையும் அவரே கட்டீட்டாரு. நான் பணம் கொடுத்தும் வாங்கவே மாட்டேன்னுட்டாரு. எனக்கு அது ஒரு மாதிரி ஆத்மார்த்தமா இருந்தது. அதுக்கு அப்புறம்தான் அவர் பர்த்டேவுக்கு சர்ப்ரைஸ்சா போகணுமுன்னு தோணுச்சு. சர்ப்ரைஸ்சா அவரோட வீட்டுக்கு போனேன். அவர் நான் வருவேன்னு எதிர்பார்க்கவே இல்லை. அவர் வீட்டுல ஒரு அஞ்சு நாள் இருந்தேன். என்னை ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டாரு.

அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர். நெப்போலியன் ஒரு மன்னர். இங்க தமிழ்நாட்டுல மினிஸ்டரா இருந்தாரு. அமெரிக்கா போய் மன்னர் மாதிரிதான் வாழ்றார். அந்த ஊர்ல இருக்கிற எல்லாருமே, அவரை பாராட்டிதான் பேசறாங்க. கிட்டதட்ட 750,800 பேர் அங்கு வந்து 4 நாள் தங்கி, அவர் பிறந்தநாளை கொண்டாடீட்டு போறாங்க. அதுவெல்லாம் ஒரு கொடுப்பினை. அவரோட அப்பா அம்மா செய்த புண்ணியம். ஆசிர்வாதம் பெற்ற வாழ்க்கை என்று உருக்கமாக பேசி இருக்கிறார் விதார்த். தன் குழந்தைக்கு ஸ்கூல் பீஸ் கட்டிய அந்த உயர்ந்த மனதை பாராட்டும் விதமாக, அமெரிக்கா வரை சென்று நெப்போலியனை வாழ்த்திவிட்டு திரும்பியிருக்கிறார் விதார்த் என்பது மிகவும் கவனிக்கத்தக்கது.

 

a2 1
author avatar
Sumathi