தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தற்பொழுது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தளபதி 68’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படதில் விஜய் – வெங்கட் பிரபு – யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணைகின்றனர். இத்திரைப்படத்தில் இதுவரை டபுள் ஆக்ஷனில் யாரும் செய்திடாத பல புதிய முயற்சிகளை எடுப்பதற்கு வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளாராம்.

அதன்படி நடிகர் விஜய் இத்திரைப்படத்தில் 19 வயது வேடத்திலும் நடிக்க உள்ளாராம். மேலும் இத்திரைப்படத்தில் நடிகை சினேகா, நடிகை லைலா, நடிகர் மைக் மோகன், நடிகர் விடிவி கணேஷ், நடிகர் யோகி பாபு என பல திரைபிரபலங்கள் நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தளபதிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்கா, தாய்லாந்து, சென்னை என இத்திரைப்படத்தின் ஷூட்டிங் பல்வேறு சமீபத்தில் தளபதி 68 ஷூட்டிங் துருக்கியில் நடைபெற்றது. ‘ தளபதி 68’ படத்தின் தலைப்பு First லுக் உடன் வருகிற புத்தாண்டு அன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது. இந்நிலையில் தளபதி 68 படத்திற்கு G.O.A.T = Greatest Of All Time என டைட்டிலை வைக்க இருப்பதாக இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

#image_title
இந்நிலையில் இன்று தளபதி 68 திரைப்படத்தின் first look வெளியாக உள்ளதாக படக்குழு ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி மாலை 6 மணியளவில் படத்தின் first look போஸ்டரும் இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த போஸ்டரில் தளபதி இரட்டை வேடங்களில் இருப்பது போன்றும், படத்தின் தலைப்பு “The Greatest Of All Time” என்று குறிப்பிட்டுள்ளனர். தற்பொழுது இந்த பதிவை தளபதி ரசிகர்கள் படுவைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த பதிவு…
View this post on Instagram
