ரசிகர்களின் மனம் கவர்ந்த தமிழ் தொலைக்காட்சியில் ஒன்று ஜீ தமிழ். தங்களது வித்தியாசமான தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. பல சூப்பர் ஹிட் சீரியல்களையும் ,நட்சத்திரங்களையும் உருவாக்கியுள்ளது. இவ்வாறு ஜீ தமிழ் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘மீனாட்சி பொண்ணுங்க’. இந்த சீரியலில் நடிகை அர்ச்சனா முன்னணி வேடத்தில் நடித்து வருகிறார்.
இவருடன் இணைந்து ஹீரோயின்களாக மோக்ஷிதா, காயத்ரி யுவராஜ், பிரணிக்கா தக்ஷு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தற்பொழுது இந்த சீரியல் 100 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது. ஜீ தமிழின் முக்கிய சீரியல்கள் ஒன்றாக கருதப்படும் இந்த சீரியலில் ஹீரோயின் ஆக நடித்த மோக்ஷிதா சமீபத்தில் இந்த சீரியலை விட்டு விலகினார். தற்பொழுது ‘ மீனாட்சி பொண்ணுங்க’ சீரியல் ஷூட்டிங் ஸ்பார்ட்டில் நடிகைகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட வீடியோ தான் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சீரியலில் கதாநாயகனின் அம்மாவாக ரங்கநாயகி என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் சசிலயா. வில்லியாக பலரின் கவனத்தை ஈர்த்த சசிலயா சோசியல் மீடியா முழுவதும் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இந்நிலையில் சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் சோபா ஒன்றில் சக நடிகைகள் ஒன்றாக அமர்ந்துள்ளனர். அப்போது சீனியர் நடிகையான ஆர்த்தி உட்கார இடம் கேட்டு இருக்கிறார். அதற்கு சசிலயா தள்ளி உட்கார்ந்து இருக்கிறார்.
சீனியர் வரும்போது ஜூனியர் எழுந்து நிற்க வேண்டும். மரியாதை கொடுக்க வேண்டும் என்றெல்லாம் ஆர்த்தி கூற வாக்குவாதம் முற்ற, கோபமடைந்த ஆர்த்தி, லயாவை அடித்துள்ளார். இதனால் அங்கிருந்த மற்ற நடிகைகள் அவர்களை விலக்கி இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து சீரியல் இயக்குனர் இரு தரப்பிலும் பேசி பிரச்சினையை முடித்து வைத்துள்ளார். தற்பொழுது இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி பேசுபொருளாக மாறியுள்ளது. இதோ அந்த வீடியோ…