தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் இந்த திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. உலகமெங்கும் தளபதி ரசிகர்கள் இத்திரைப்படத்தை எதிர்பார்த்து ஆவலாக காத்திருக்கின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 திரைப்படத்தின் விஜய் நடிக்க உள்ளார்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படதில் விஜய் – வெங்கட் பிரபு – யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணைகின்றனர். இத்திரைப்படத்தில் இதுவரை டபுள் ஆக்ஷனில் யாரும் செய்திடாத பல புதிய முயற்சிகளை எடுப்பதற்கு வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தளபதி 68 வேலைகள் தொடங்கபட்டது.

அதன்படி விஜய், வெங்கட் பிரபு மற்றும் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள யுனிவர்சிட்டி ஆப் சவுதர் கலிபோர்னியா இன்ஸ்டியூட்டா ஃபார் க்ரியேட்டிவ் டெக்னாலஜி சென்டருக்கு சென்று சென்னைக்கு திரும்பினர்.

இதைத்தொடர்ந்து தளபதி 68 திரைப்படத்தின் பூஜை சென்னையில் பிரசாந்த் ஸ்டூடியோவில் நடைபெற்றது. தற்பொழுது ஷூட்டிங் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் வேஷ்டி சட்டையில் புது மாப்பிள்ளை போல அழகாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தில் லியோ திரைப்படத்தின் தயாரிப்பாளரும் அருகில் அமர்ந்துள்ளார். இதோ அந்த அழகிய புகைப்படம்…

