தென்னிந்திய திரைப்பட நடிகரான விஜயகுமார் பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இவர் தற்போது வரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.1961 ஆம் ஆண்டு ஸ்ரீ வள்ளி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், அவள் ஒரு தொடர்கதை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

தற்போது இவர் சினிமாவில் இருந்து விலகி உள்ளார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள நாட்டுச்சாலை என்ற கிராமத்தில் பிறந்த இவருக்கு முத்து கண்ணு மற்றும் மஞ்சுளா என்ற இரு மனைவிகள் உள்ளன. மகள்கள் கவிதா, அனிதா, மகன் அருண் விஜய் ஆகியோர் முதல் மனைவி பிள்ளைகள்.

அடுத்து மகள்கள் வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோர் இரண்டாவது மனைவியின் பிள்ளைகள். இவர்களில் நான்கு பேர் சினிமாவில் இருக்கின்றனர்.இருவர் மட்டும் சினிமா பக்கம் வரவில்லை. இவரின் மகன் அருண் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் கவிதா விஜயகுமார் தற்பொழுது தனது 55வது பிறந்த நாளை தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் கொண்டாடியுள்ளார். இவரை பற்றி பலருக்கும் பெரிய அளவில் தெரிய வாய்ப்பில்லை. இவர் 1995ம் ஆண்டு பிரபல நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான கூலி என்ற திரைப்படத்தில், சரத்குமாரின் தங்கையாக தோன்றி நடித்திருந்தார். அவர் நடித்த முதல் மற்றும் கடைசி திரைப்படம் அதுதான்.

அதன் பிறகு பெரிய அளவில் பட வாய்ப்புகள் வந்த பொழுதும் அவற்றை தவிர்த்து விட்டு, சங்கர் என்ற தொழிலதிபரை மணந்து கொண்டு இவர் அமெரிக்காவில் குடியேறினார். இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இதில் அவருடைய மகள் ஹாசினிக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுதும் 30 வயதை கடந்தும் இன்னும் இளமையாக இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் அவ்வப்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது.
