எந்த படமும் செய்யாத சாதனையை செய்ய போகும் விஜயின் ‘லியோ’… இதுவரை முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் எது தெரியுமா…?

By Begam on ஐப்பசி 17, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தளபதியுடன் இரண்டாவது முறை இணைந்த இவர்களது வெற்றிக்கூட்டணி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.. நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜயுடன் இணைந்து நடிகை திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில்பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்,

   

இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லியோ தாஸ் என்ற கதாபாத்திரத்தில் தளபதி விஜய் நடிக்க ஆண்டனி தாஸ் மற்றும் ஹெரால்ட் தாஸ் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் இருவரும் நடித்திருக்கின்றனர். வரும் அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

   

 

தற்பொழுது லியோ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 40 கோடியை எட்டும் சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். அதன்படி தமிழ் சினிமாவில் முதல் நாள் அதிக வசூல் செய்த திரைப்படம் தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படம் தான். இத்திரைப்படம் 33 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. அதற்கு முன்னாள் விஜயின் சர்க்கார் 32 கோடி வசூல் செய்ததாகவும்,

ஜெயிலர் திரைப்படம் முதல் நாள் வசூல் 21 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது. தற்பொழுது வெளியாகவுள்ள லியோ திரைப்படம் கண்டிப்பாக முதல் நாள் வசூலாக 40 கோடி ரூபாய் எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் இத்திரைப்படம் திரையிடப்பட இருப்பதால் இது சாத்தியம் தான் என கூறப்படுகிறது.