தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இரண்டாவது முறை இணைந்த இவர்களது வெற்றிக்கூட்டணி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.. நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜயுடன் இணைந்து நடிகை திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் இத்திரைப்படத்தில்பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
வரும் அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. உலகமெங்கும் தளபதி ரசிகர்கள் வெறித்தனமாக லியோ திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டை தாண்டி கேரளாவிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது லியோ படம் ரிலீஸ் ஆக உள்ளதால், அங்கு தற்போதே கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ளது.
கேரளாவில் லியோ பட டிக்கெட் முன்பதிவு தொடங்கியதை அடுத்து கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் பைக்கில் ஊர்வலமாக வந்து, தியேட்டரில் நடிகர் விஜய்க்கும் பிரம்மாண்ட கட் அவுட் வைத்து அமர்களப்படுத்தி மாஸ் காட்டி உள்ளனர். மேலும் மேள தாளத்துடன் லியோ புக்கிங் தொடங்கியதை விஜய் ரசிகர்கள் கொண்டாடிய வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…