NEWS
கேப்டன் வீட்டில் தளபதி சொன்ன முக்கியமான விஷயம் இதுதான்… பேட்டியில் மனம்திறந்த பிரேமலதா விஜயகாந்த்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் உச்சபட்ச நடிகராகவும் இருந்து வருபவர் நடிகர் விஜய். ஆனாலும் தமிழக மக்களுக்காக பணி செய்ய விரும்பி சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து தீவிரமாக பணியாற்றி வருகிறார் தளபதி விஜய்.
ஏற்கனவே கமிட்டான படங்களில் நடித்துக் கொடுத்து முடித்துவிட்டு முழுநேர அரசியல்வாதியாக களமிறங்க திட்டமிட்டு இருக்கிறார் தளபதி விஜய். தனது அரசியல் பணிகளில் ஆரம்ப கட்டமாக கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொதுத் தேர்தலில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகையை வழங்கினார். சமீபத்தில் தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடியை அறிமுகம் செய்து வைத்த தளபதி விஜய் அத்தோடு கட்சி பாடலையும் வெளியிட்டு உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டார். அவரது உறுதிமொழியில் அனைத்து மக்களுக்கும் மத இன சொந்த இடம் பாலினம் என வேறுபாடு இல்லாமல் சம உரிமை கிடைக்க பாடுபடுவேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார் தளபதி விஜய்.
தளபதி விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் கோட். இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். கோட் திரைப்படத்தில் AI தொழில்நுட்பம் மூலமாக கேப்டன் விஜயகாந்த் அவர்களை நடிக்க வைத்துள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. அது சம்பந்தமாக கடந்த வாரம் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இல்லத்துக்கு சென்றிருந்தார் தளபதி விஜய்.
சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள கேப்டன் விஜயகாந்த் இல்லத்திற்கு சென்ற தளபதி விஜய் AI தொழில்நுட்பத்தின் மூலமாக கேப்டன் விஜயகாந்த் அவர்களை கோட் திரைப்படத்தில் நடிக்க வைத்ததற்கு அனுமதி அளித்ததற்காக கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மனைவி மற்றும் தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் அவர்களை நேரில் சந்தித்து நன்றி கூறி வாழ்த்து பெற்றார் தளபதி விஜய். அன்று கேப்டன் குடும்பத்தாருடன் விஜய் கலந்து உரையாடுவது போன்ற புகைப்படங்கள் வெளிவந்தன.
தற்போது இன்று அளித்த பேட்டியில் பிரேமலதா விஜயகாந்த், விஜய் தங்கள் வீட்டிற்கு வரும்போது என்ன கூறினார் என்பதை பகிர்ந்துள்ளார். அவர் கூறியது என்னவென்றால் விஜய் நாங்கள் பார்க்க வளர்ந்த பிள்ளை தான். எஸ்ஏ சந்திரசேகரும் கேப்டன் விஜயகாந்த் அவர்களும் எவ்வளவு நண்பர்கள் என்று இந்த உலகத்திற்கே தெரியும். சிறுவயதில் இருந்தே விஜயை நாங்கள் பார்த்து வருகிறோம். அதேபோல் வெங்கட் பிரபுவும் சிறுவயதிலிருந்தே எங்களுக்கு தெரியும். அதனால் இது ஒரு குடும்ப சந்திப்பு போன்றே தான் இருந்தது.
விஜய் எப்போதும் எங்கள் வீட்டுப்பிள்ளை தான். அவர் எனது மகன்களான விஜய பிரபாகரிடமும் சண்முக பாண்டியனிடமும் வெகு நேரம் பேசிட்டு இருந்தார். என் மகன்கள் சினிமாவில் நீங்க தான் அண்ணா இன்ஸ்பிரேஷன் என்று கூறினார்கள். அதற்கு விஜய் விஜய் பிரகபாகரனிடம் அரசியலில் நீங்கதான் எனக்கு சீனியர். மேடைகளில் எல்லாம் ரொம்ப நல்லா பேசுறீங்க, பிரஸ்மீட்டில் எல்லாம் நல்லா கொண்டு போறீங்க அப்படின்னு அரசியல் சார்ந்து ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தாரு. என்கிட்ட அவர் முக்கியமா சொன்னது என்னன்னா கோட் திரைப்படத்தில் விஜயகாந்த் அண்ணன் வர்ற காட்சி எல்லாம் ரொம்ப பிரம்மாண்டமா வந்து இருக்குமா. படம் வெளியாகிற அன்னைக்கு ஸ்பெஷல் ஷோ உங்களுக்கு அரேஞ்ச் பண்ணி இருக்கோம். குடும்பத்தோட வந்து நீங்க பாக்கணும் அப்படின்னு சொன்னாரு என்று கூறியுள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.