Connect with us

சூப்பர் ஸ்டார் சொல்லிட்டா மறுபேச்சு ஏது..? முத்து படத்திற்கு கே.எஸ் ரவிக்குமாரின் சம்பளம்.. வியந்து போன பாலசந்தர்..!!

CINEMA

சூப்பர் ஸ்டார் சொல்லிட்டா மறுபேச்சு ஏது..? முத்து படத்திற்கு கே.எஸ் ரவிக்குமாரின் சம்பளம்.. வியந்து போன பாலசந்தர்..!!

பிரபல இயக்குனரான கே.எஸ் ரவிக்குமார் இயக்குனர் விக்ரமணிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்துள்ளார். கடந்த 1990-ஆம் ஆண்டு ரிலீசான புரியாத புதிர் திரைப்படம் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு சேரன் பாண்டியன், ஊர் மரியாதை, சூரியன் சந்திரன், புருஷ லட்சணம், நாட்டாமை, பெரிய குடும்பம், முத்து, அவ்வை சண்முகி, படையப்பா உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார். ஒரு சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கே.எஸ் ரவிக்குமார் நடித்துள்ளார்.

   

கடந்த 1995 ஆம் ஆண்டு கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் முத்து திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. முத்து திரைப்படத்தில் மீனா, ரகுவரன், சரத்பாபு, ராதா ரவி, செந்தில், வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை பாலச்சந்தர் தயாரித்தார். முத்து திரைப்படத்தை இயக்கும்போது ரஜினிகாந்த் கே.எஸ் ரவிக்குமாரிடம் இதுவரை எவ்வளவு சம்பளம் வாங்கி இருக்கிறீர்கள் என கேட்டுள்ளார்.

   

 

அதற்கு கேஸ் ரவிக்குமார் 12 முதல் 13 லட்சம் ரூபாய் வாங்கி இருக்கிறேன் என கூறியுள்ளார். உடனே முத்து படத்திற்கு கே. எஸ் ரவிக்குமாருக்கு 15 லட்சம் ரூபாய் சம்பளம் என ரஜினிகாந்த் எழுதிக் கொடுத்துள்ளார். இதனை பார்த்த தயாரிப்பாளர் பாலச்சந்தர் உனக்கு 15 லட்ச ரூபாய் சம்பளமா? நான் இதுவரை 5 லட்ச ரூபாய் சம்பளம் வரை முழுசா வாங்கியது கிடையாது என கூறியுள்ளார்.

உடனே கே.எஸ் ரவிக்குமாரும் வேண்டுமானால் சம்பளத்தை குறைத்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார். ஆனால் பாலச்சந்திரன் ரஜினிகாந்த் கூறிவிட்டால் அதற்கு மறு பேச்சு ஏது? இந்த சம்பளத்தையே வைத்துக் கொள்ளலாம் என கூறி இருக்கிறார். அதன்படி கே.ஸ் ரவிக்குமாருக்கு முத்து படத்தை இயக்கியதற்காக 15 லட்ச ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டது. தான் இயக்கிய நாட்டாமை படத்திற்கு 5 லட்சம் ரூபாய் தான் சம்பளம் வாங்கியதாக கே.எஸ் ரவிக்குமார் கூறியுள்ளார்.

பெண்மை போற்றிய பெரும் கலைஞர் கே.பாலச்சந்தர் பிறந்த தின சிறப்புப் பதிவு !

author avatar
Priya Ram

More in CINEMA

To Top