CINEMA
இதை நீங்க கவனிச்சீங்களா..? நண்பன் படத்தில் இத்தனை லாஜிக் மிஸ்டேக்ஸ் இருக்குதா..?
பிரபல இயக்குனரான ஷங்கர் கடந்த 1993-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன ஜென்டில் மேன் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார்.
அந்த வகையில் கடந்த 2012-ஆம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த நண்பன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். கடந்த 2009-ஆம் ஆண்டு ஹிந்தியில் 3 இடியட்ஸ் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் ரீமேக் தமிழில் நண்பன் என்ற பெயரில் எடுக்கப்பட்டது. நண்பன் திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார்.
இந்த படத்தில் சில லாஜிக் மிஸ்டேக்ஸ் இருந்தது யாராவது கவனித்தீர்களா பஞ்சவன் பாரிவேந்தன் டிகிரி சான்றிதழில் அவர் 1997-ஆம் ஆண்டு முதல் 2001- ஆம் ஆண்டு வரை படித்ததாக குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் முதல் நாள் அவர் கல்லூரியில் படித்த காட்சிகளை காண்பிக்கும் போது வகுப்பில் இருக்கும் கரும்பலகையில் 1998 வருடம் என குறிப்பிடப்பட்டிருக்கும் ஸ்கூட்டி பெப்ட் 2003-ஆம் ஆண்டில் தான் வந்தது.
ஆனால் 2001- ஆம் ஆண்டே நண்பன் படத்தில் விஜய் ஸ்கூட்டி பெப்ட் ஓட்டும் காட்சிகளை காண்பித்து இருப்பார்கள். இதனை அடுத்து இலியானாவின் அக்காவுக்கு பிரசவம் பார்க்கும் போது யூடியூப் பார்த்து தான் பண்ணுவார்கள். யூடியூப் வந்தது 2005-ஆவது ஆண்டு. ஆனால் 2001-ஆம் ஆண்டு அதை படத்தில் காண்பித்துள்ளனர்.