Connect with us

சிறுதானிய உணவு விற்பனையில் சாதித்த 55 வயது பெண்மணி… Chennai Ogmo Foods உருவான வரலாறு தெரியுமா…?

Startup

சிறுதானிய உணவு விற்பனையில் சாதித்த 55 வயது பெண்மணி… Chennai Ogmo Foods உருவான வரலாறு தெரியுமா…?

சிறுதானிய உணவு வகைகள் ஊட்டச்சத்திரத்தின் ஆற்றல் மையமாகும். ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்பு திணை இந்தியாவில் அதிகம் விளையும் பிரதான உணவுகளில் ஒன்றாக இருந்தது. ஆனால் தற்போது சிறுதானிய உணவுகள் நம் சுற்றுச் சூழல் உணவு பழக்க வழக்கத்திலிருந்து வெகு தூரம் சென்று விட்டது. நம் முன்னோர்கள் இந்த சிறுதானிய உணவுகளை சாப்பிட்டு தான் நோய் நொடி இல்லாமல் நீண்ட காலமாக வாழ்ந்து வந்தார்கள்.

என்னதான் உணவு பழக்க வழக்கங்கள் மாறிவிட்டாலும் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மக்களுக்கு ஏற்பட்ட அச்சம் விழிப்புணர்வு காரணமாக தங்களது உடல் நலனில் அக்கறை காட்ட தொடங்கி விட்டார்கள். சிறுதானிய உறவுகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி வருகிறார்கள். இதை இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சாதகப்படுத்தி கொண்டு பல நிறுவனங்கள் உருவாகி வருகின்றது. அந்த வரிசையில் வந்தவர் தான் Ogmo Foods தலைவர் சஞ்சிதா கிருஷ்ணகுமார்.

   

   

சஞ்சிதா கிருஷ்ணகுமார் என்பவரால் நிறுவப்பட்டது தான் Ogmo Foods. திணைகளை பிரபலப்படுத்தும் முன்னணி இந்தியா தொடக்க நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். சிறுதானியங்களை பற்றி இளைய தலைமுறைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஆரோக்கியமான உணவை ஊக்குவித்தல் மற்றும் உள்ளூர் விவசாயிகள் மற்றும் கிராமப்புற பெண்களுக்கு இந்த தானியங்களை பயிரிட்டு சிறந்த வாழ்வாதாரத்தை ஈட்ட இந்த நிறுவனம் உதவுகிறது.

 

சஞ்சிதா ராஜஸ்தானில் உள்ள உதயப்பூரில் பிறந்து வளர்ந்தவர். இவர் அறிவியல் பட்டதாரி மற்றும் பொருளாதாரம் மற்றும் வணிக மேலாண்மையில் முதுகலை பட்டம் பெற்றவர். 1993 சஞ்சிதா டெல்லியின் கார்ப்பரேட் கம்பெனியில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றினார். 1996 இல் திருமணம் செய்து கொண்டார் சஞ்சிதா. உடல்நல பிரச்சனை காரணமாக பணிக்கு செல்ல இயலாத சஞ்சீதா 10 வருடங்கள் ஓய்வில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

முழுமையாக குணமடைந்த பிறகு சஞ்சிதா தனது படைப்பாற்றலை மீது உள்ள ஆர்வத்தால் புதிதாக எதையாவது சாதிக்க வேண்டும் என்று உத்வேகம் கொண்டிருந்தார். பல ஆண்டுகளாக அவர் நாட்டில் புகழ்பெற்ற உணவு ஒப்பனையாளராக பணியாற்றினார். பிலிப்ஸ், ஐடிசி, சொமேட்டோ, நெஸ்ட்லே, அமுல், அதானே மற்றும் சுசுகி போன்ற பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச பிராண்டுகளுக்காக 100க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி வணிக படப்பிடிப்புகளை வெற்றிகரமாக நடத்தி முடித்தவர் சஞ்சீதா.

பின்னர் மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் உணவு துறையில் ஆராய்ச்சி செய்ய விரும்பினார் சஞ்சிதா. அதன் ஆராய்ச்சியின் முடிவே Ogmo Foods நிறுவனம் ஆகும். சஞ்சிதாவும் அவரது கணவரும் 2010 ஆம் ஆண்டு ஒரு சிறிய விவசாய நிலையத்தை வாங்கினர். ஒவ்வொரு சிறு கிராமங்களுக்கு சென்று திணைகள் மற்றும் கிராம மக்கள் சமைத்த நாட்டுப்புற சமையல் குறிப்புகளை ஆராய்ந்தனர்.

சிறு திணைகளை பயிரிட்டு அவற்றை பயன்படுத்தி மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்களை தயாரிக்க முடிவு செய்தார் சஞ்சிதா. சஞ்சிதாவும் அவரது கணவரும் தங்களுடைய சேமிப்பில் இருந்து 40 லட்ச ரூபாய் முதலீடு செய்து ஒரு சிறிய யூனிட்டை தொடங்கினர். இந்த தொழில் சிறப்பாக செயல்பட தொடங்கியது. சஞ்சிதாவின் கணவரும் தனது ஐடி வேலையை விட்டுவிட்டு இந்த நிறுவனத்தில் சேர்ந்தார்.

Ogmo Foods நிறுவனம் சிறுதினை எனர்ஜி பைட்ஸ், எனர்ஜி ட்ரிங்ஸ், கிரானொலோ, குக்கீஸ், முன் உறவைத்த திணை ஹெல்த் மிக்ஸ் தானியங்கள் மற்றும் குழந்தைகளுக்கான கஞ்சி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தயாரிப்பை செய்து வருகிறது. இன்று Ogmo Foods 50க்கும் மேற்பட்ட பிராந்திய உயர்நிலை சில்லறை விற்பனை கடைகளில் முன்னிலையாக இருக்கிறது.

இந்த Ogmo Foods தயாரிப்புகள் அனைத்தும் இயற்கையானவை மற்றும் வீகன் ஆகும். இந்த பிராண்ட் சில்லறை விற்பனை மட்டுமல்லாது அமேசான் ஸ்டோர் போன்ற பிரீமியம் சில்லரை விற்பனையில் அசத்தி வருகிறது.

இந்த Ogmo Foods நிறுவனமானது விவசாயிகள் மற்றும் கிராமப்புற பெண்களுக்கு தொடர்ந்து உதவுவதை நோக்கமாக கொண்டுள்ளது. அவர்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதன் மூலம் திணை உணவுகளை பிரபலப்படுத்துகிறது. நம்பிக்கை மற்றும் விடாமுயற்சியினால் யார் வேண்டுமானாலும் சாதிக்க முடியும், வயது ஒரு தடையல்ல என்பதற்கு Ogmo Foods நிறுவனர் சஞ்சிதா முன்மாதிரியாக இருக்கிறார்.

Continue Reading
You may also like...

More in Startup

To Top