தளபதி விஜய் வாரிசு படப்பிடிப்பின் போது கிடைத்த இடைவெளியில் கிரிக்கெட் விளையாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. கடந்த ஆண்டு பொங்கல் தினத்தன்று தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபைலி இயக்கத்தில் தில்ராஜ் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்த படம்தான் வாரிசு. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்தார். மேலும் விஜய்யுடன் சரத்குமார், பிரபு, ஷாம், ஜெயசுதா, பிரகாஷ்ராஜ், எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே பாடலுக்கு தமிழ்நாடே ஆட்டம் போட்டது. அஜீத்துடன் துணிவு படத்துடன் மோதிய வாரிசு வசூலிலும் குறை வைக்கவில்லை.

#image_title
இப்படத்தின் ஷூட்டிங் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. ஷுட்டிங் நடந்த போது கிடைத்த இடைவெளியில் வாரிசு படக்குழுவினர் கிரிக்கெட் ஆடியுள்ளனர். இதில் ஹைலைட் என்னவென்றால் தளபதி விஜய்யும் படக்குழுவினருடன் இணைந்து கிரிக்கெட் விளையாடினார். தற்போது படக்குழுவினர் விளையாடிய வீடியோவை அப்படத்தின் பாடலாசிரியர் விவேக் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவில் பாடலாசிரியர் விவேக் பேட் பிடிக்க அவர் அருகில் விஜய் பீல்டிங் நிற்பது போலவும், எதிர் முனையில் ராஷ்மிகா நிற்பது போலவும், ஒருவர் பந்து வீச விவேக் அதை சிக்ஸருக்கு விரட்டினார். உடனே தளபதி ஏய் அது சிக்ஸரு… சிக்ஸரு என்று உற்சாகமாகப் பேசும் வீடியோவும் அதில் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த வீடியோவில் யோகிபாபு, ஷாம் ஆகியோரும் உள்ளனர்.

#image_title
நடிகர் விஜய் ஏற்கனவே கில்லி படத்தில் கபடி வீரராகவும், பத்ரி படத்தில் குத்துச் சண்டை வீரராகவும், பிகில் படத்தில் கால்பந்து வீரராகவும் நடித்துக் கலக்கியிருந்த நிலையில் தற்போது கிரிக்கெட் களத்திலும் சொல்லி அடித்தாற்போல் கில்லியாக கலக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
நடிகர் விஜய்யின் இந்த வீடியோவினை அவரது ரசிகர்கள் பார்த்துக் கொண்டாடி வருகின்றனர். மேலும் இதுபோல மறுபடியும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் வருங்காலங்களில் தளபதி விஜய் நடிக்க வேண்டும் என்றும் கமெண்ட்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Thalapathy @actorvijay – cute fight for our team is Wholesome ????????❤️
‘Sixxxu.. Sixu Sixu’ @iamRashmika @iYogiBabu @ActorShaam @directorvamshi pic.twitter.com/1SzjyP7LMK
— Vivek (@Lyricist_Vivek) January 9, 2024
