எம்.ஜி.ஆர் சொன்னதையும் பண்ண முடியல, திருமண ஆசையும் நிறைவேறல.. கடைசி வரை ஏமாற்றத்துடன் பிரிந்த சில்க் ஸ்மிதாவின் உயிர்..

By Sumathi

Updated on:

ஆந்திரா மாநிலம், நெல்லூர் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்குள் வந்தவர் விஜயலட்சுமி. அவரை தனது வண்டிச்சக்கரம் படம் மூலம் சில்க் ஸ்மிதாவாக மாற்றியவர் நடிகர் வினுசக்கரவர்த்தி. அடுத்த 3 ஆண்டுகளில் தமிழ் சினிமா சிலுக் இல்லாத படங்களே இல்லை என்ற நிலைக்கு மாறி இருந்தது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக் படங்களில் சில்க் ஸ்மிதா தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக மாறி இருந்தார். கவர்ச்சி நாயகியான அவரை, தனது அலைகள் ஓய்வதில்லை படத்தில், ஒரு கவுரவமான கேரக்டர் தந்து அசத்தியிருந்தார் இயக்குநர் பாரதிராஜா.

   

அந்த படத்தை பார்த்து அசந்துபோன எம்ஜிஆர், சில்க் ஸ்மிதாவை அழைத்து இனிமேல் இதுபோன்ற நல்ல கேரக்டர்களில் மட்டுமே நடி என அறிவுரை வழங்கினார். ஆனால் அத்தகைய நல்ல கேரக்டர்களில் சில்க் ஸ்மிதாவை நடிக்க வைக்க தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் தயாராக இல்லை. சில்க் ஸ்மிதாவின் உடையை படத்துக்கு படம் இன்னும் குறைப்பதிலேயே அவர்கள் ஆர்வம் காட்டினர். இதனால் சில்க் ஸ்மிதா தன்னால் ஒரு ஹீரோயினாக நடிக்க முடியவில்லையே என மிகவும் வருத்தப்பட்டார். அப்படி அவர் முயற்சி எடுத்து நடித்த சில படங்களும் தோல்வியடைந்தன. ஏனெனில் சில்க் ஸ்மிதாவை கவர்ச்சியாக பார்க்கவே அன்றைய காலகட்டத்தில் ரசிகர்களும் விரும்பினர்.

ஆனால் நாயகியாக தொடர்ந்து நடிக்க ஆசைப்பட்ட சில்க் ஸ்மிதா, சொந்தமாக பணம் போட்டு படம் தயாரித்து, அதில் நாயகியாக நடித்தார். அதுதான் அவர் எடுத்த மிக மோசமான முடிவாக அமைந்தது. அதனால்தான் நிறைய கடன் பிரச்னைகளில், பண பிரச்னைகளில், சிக்கல்களில் அவர் சிக்கிக்கொண்டார். அழகான வசதியான கணவர் எனக்கு வேண்டாம். அன்பான, என் மீது அக்கறை கொண்ட கணவர் போதும். ஒரு வீடு, ஒரு கார், ஒரு போன் மட்டும் போதும்.

silk main cine 1000x600

 

பெரிய வசதிகள் எல்லாம் வேண்டாம் என்றும் சில்க் ஸ்மிதா கூறிவந்தார். கடைசியாக அவர் நடித்த படம் சுபாஷ். 1996ம் ஆண்டில் தனது திருமண ஆசை நிறைவேறாமலேயே அவர் இறந்து போனார் என்று ஒரு வீடியோவில் பேசி இருக்கிறார் நடிகர் சித்ரா லட்சுமணன்.

author avatar
Sumathi