Connect with us

CINEMA

தளபதி 69 படத்தை தயாரிக்கப்போவது இவர் தானா..! விஜய்யையும் இவரையும் பிரிக்கவே முடியாது போலயே..

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் “GOAT” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்திற்குப் பிறகு விஜய் ஹெச்.வினோத்துடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.

விஜய்-ஹெச்.வினோத் இணையும் தளபதி 69 திரைப்படத்தை “RRR” திரைப்படத்தின் தயாரிப்பாளரான தானய்யா தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தானய்யா தளபதி 69 திரைப்படத்தை தயாரிக்கவில்லை என்று சமீபத்தில் தகவல் வெளியானது.

   

தளபதி 69 திரைப்படத்திற்கான முறையான ஒப்பந்தம் முடிவடையாத நிலையில் தானய்யா “தளபதி 69” திரைப்படத்தை விநியோகிக்க முயற்சி செய்தார் என்று கூறப்பட்டது. இதனால் கடுப்பான விஜய், தானய்யாவின் தயாரிப்பில் நடிக்கப்போவதில்லை என்று முடிவெடுத்துவிட்டாராம். இவ்வாறு ஒரு தகவல் சமீபத்தில் வெளிவந்தது.

இந்த நிலையில் தற்போது “தளபதி 69” திரைப்படத்தின் தயாரிப்பாளர் குறித்த ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது “தளபதி 69” திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ எஸ் எஸ் லலித்குமார் தயாரிக்கவுள்ளதாக செய்திகள் வலம் வருகின்றன.

எஸ் எஸ் லலித்குமார் விஜய்யின் “மாஸ்டர்”, “லியோ” போன்ற திரைப்படங்களை தயாரித்தவர். லலித்குமாரும் விஜய்யும் சிறந்த நண்பர்கள் என்று கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படும் நிலையில் “தளபதி 69” திரைப்படத்தை லலித்குமார் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
Continue Reading

More in CINEMA

To Top