பகத் பாசிலை காமெடியன் ஆக்கிய ரஜினி பட இயக்குனர், என்ன கொடுமை சார் இது!

By Arun on சித்திரை 12, 2024

Spread the love

மலையாளத்தில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து வரும் பகத் பாசில், சமீப காலமாக தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் டெரர் வில்லனாக வலம் வருகிறார். தமிழில் “வேலைக்காரன்”, “சூப்பர் டீலக்ஸ்”, “விக்ரம்”, “மாமன்னன்” போன்ற திரைப்படங்களில் நடித்த பகத் பாசில் தெலுங்கில் “புஷ்பா” திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் “புஷ்பா 2” திரைப்படத்திலும் பகத் பாசில் வில்லனாக ஜொலிக்கவுள்ளார். இத்திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவருகிறது.

   

   

இந்த நிலையில் “ஜெய் பீம்” திரைப்பட இயக்குனரான தா.செ.ஞானவேல் தற்போது ரஜினிகாந்தை வைத்து “வேட்டையன்” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் அமிதாப் பச்சன், ராணா, மஞ்சு வாரியர், துசாரா விஜயன், ரித்திகா சிங் போன்ற பலரும் நடிக்க பகத் பாசில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

 

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் பகத் பாசில்தான் வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்பட்டது.

ஆனால் தற்போது வேறு மாதிரியான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது “வேட்டையன்” திரைப்படத்தில் ராணாதான் வில்லனாக நடிக்கிறாராம். பகத் பாசில் ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இவ்வாறு ஒரு அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.