Connect with us

CINEMA

தளபதிக்கு பயம்காட்டிய PAN இந்திய நடிகர்.. GOAT படத்தின் வெளியீடு தள்ளிப்போனதற்கான காரணம் இதுதானா?

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் “GOAT” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்து வருகிறார். மேலும் பிரஷாந்த், மோகன், பிரபு தேவா, சினேகா உள்ளிட்ட பலரும் இதில் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் “GOAT” திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது. இத்திரைப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது. இத்திரைப்படம் முதலில் ஆகஸ்து மாதம் 15 ஆம் தேதி வெளிவரும் என்று தகவல்கள் வந்தன. ஆனால் தற்போது “GOAT” திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போயுள்ளது.

   

இந்த நிலையில் மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “GOAT திரைப்படத்தை ஆகஸ்து மாதம் வெளியிடுவதாகத்தான் முதலில் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் புஷ்பா 2 திரைப்படம் ஆக்ஸது 15 ஆம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டது.

புஷ்பா 2 திரைப்படம் வெளிவரும்போது விஜய் திரைப்படங்களுக்கு ஆந்திராவில் திரையரங்குகள் கிடைக்காது. ஆதலால்தான் GOAT திரைப்படத்தின் வெளியீட்டை செப்டம்பர் மாதத்திற்குத் தள்ளி வைத்துவிட்டார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

“GOAT” திரைப்படத்திற்குப் பிறகு விஜய், ஹெச் வினோத்துடன் கைக்கோர்க்கவுள்ளார் என்று செய்திகள் வெளிவருகின்றன. இத்திரைப்படம் விஜய்யின் 69 ஆவது திரைப்படமாக அமையவுள்ளது. அதன் பின் சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் விஜய் ஈடுபடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
Continue Reading

More in CINEMA

To Top