வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படத்திற்கு தளபதி 68 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. முதலில் பாடல் காட்சிகளுடன் படத்தின் சூட்டிங் துவங்க உள்ளதாகவும், பிரபல டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தர் கொரியோகிராப் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் லீக் ஆனது.
இந்நிலையில் தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக தெலுங்கு பட நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
நடிகை மீனாட்சி சுந்தரிக்கு மாடலிங் துறையில் ஆர்வம் அதிகம். தற்போது நீச்சல் உடையில் படு கிளாமராக இருக்கும் புகைப்படத்தை மீனாட்சி சவுத்ரி சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.