பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நேற்று முன்தினம் பிரமாண்டமாக தொடங்கியது. இதில் விசித்ரா, விஷ்ணு, வினுஷா தேவி, சரவணன், பாவா செல்லதுரை, கூல் சுரேஷ், ஆயிஷா உதயகுமார், ஜோவிகா, ஐஷு, பிரதீப் ஆண்டனி, மாயா கிருஷ்ணன், ரவீனா, யுகேந்திரன், மணி சந்திரா, விஜய் வர்மா, அனன்யா, பூர்ணிமா ரவி, நிக்சன் என 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
இதில் விஜய் வர்மா இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். விஜய் வர்மாவை குறைவாக கவர்ந்த ஐஷு, நிக்சன், பாவா செல்லதுரை, அனன்யா, விணுஷா, ரவீனா ஆகிய 6 பேரும் இரண்டாவது பாதை வழியாக மற்றொரு வீட்டிற்கு சென்றனர். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரோமோ வெளியானது.
Small boss வீட்டில் இருப்பவர்கள் மட்டும்தான் சமைக்க வேண்டும் என்பது ரூல். ஆனால் இதை விசித்திராவும், யுகேந்திரன் மீறிவிட்டார்கள். இதனால் நீங்கள் இருவரும் Small boss வீட்டில் தான் இருக்கணும் என பிக் பாஸ் கூறுகிறார். அதற்கு பிரதீப் அங்கே நாமினேட் ஆகியிருக்கும் 2 பேரை இங்கு அனுப்பி விடுங்கள் பிக் பாஸ் என கூறுகிறார். உடனே விசித்ரா நீங்கள் ஏன் அப்படி கூறினீர்கள் என கேட்டு, அவர்கள் எங்களுக்கு equal-ஆ என கூறி கோபப்படுகிறார். இது தொடர்பான ப்ரோமோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.