
CINEMA
கண்ணா 3 லட்டு தின்ன ஆசையா..! தலைவர் 170 படத்தின் அடுத்தடுத்த அப்டேட்.. துள்ளி குதிக்கும் ரசிகர்கள்..!!
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள படத்திற்கு தலைவர் 170 என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை லைக்கா புரொடக்ஷன் தயாரிக்கிறது. இந்நிலையில் படக்குழுவினர் தலைவர் 170 படத்தின் அடுத்த அடுத்த அப்டேட்டுகளை அறிவித்து வருகின்றனர்.
அதன்படி நேற்று படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது. இந்நிலையில் நடிகைகள் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் ஆகியோர் தலைவர் 170 படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் அக்டோபர் நான்காம் தேதி தலைவர் 170 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரஜினி போலீஸ் கெட்டப்பில் இருப்பார் எனவும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.