
CINEMA
என்னது… எதிர்நீச்சல் கதிர் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பு அந்த மாதிரி படங்களில் நடித்துள்ளாரா.??வைரலாகும் சர்ச்சைக்குரிய புகைப்படம்..
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரை பார்ப்பதற்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த சீரியலில் அனைத்து கதாபாத்திரங்களும் தனித்துவமான குணம் உள்ளது. இந்நிலையில் ஆதி குணசேகரனின் தம்பி கதிர் கதாபாத்திரத்தில் நடிப்பவர் விபு ராமன். விபு ராமன் சீரியலில் வில்லன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
முன்னதாக விபு ராமன் பல்வேறு திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர் அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், அழகு, கல்யாண பரிசு, விதி, திகில் ஆகிய சீரியல்களிலும் நடித்துள்ளார். ஆனாலும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்த பிறகுதான் விபுராமன் பிரபலமானார்.
முதன்முதலாக தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க தொடங்கிய விபு ராமன் தமிழில் ஹன்சிகாவுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் நடித்திருந்தார். கிடைத்த கதாபாத்திரங்களை எல்லாம் ஏற்று நடித்த விபுராமன் ஆரம்ப காலகட்டத்தில் ஒரு அடல்ட் மூவியில் நடித்துள்ளார். அது தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.