தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடிகர் சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால் ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்கு பின் பூஜை போட்ட திரைப்படங்களின் படப்பிடிப்பை நடத்தக் கூடாது என தயாரிப்பாளர் சங்கம் ஸ்ட்ரிக்ட்டாக சொன்னது.

அது மட்டும் இல்லாமல் ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்கு முன் பூஜை போட்ட படங்களை அக்டோபர் 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும், நவம்பர் ஒன்றாம் தேதி முதல் எந்த படப்பிடிப்பும் நடக்காது எனவும் அறிவித்தது. இந்த நிலையில் ஹச்.வினோத் இயக்கத்தில் தளபதி தனது 69-ஆவது படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் தான் இந்த படத்தின் பூஜை நடந்தது. தளபதி 69-ஆவது படத்தின் பாடல் காட்சிகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தளபதி 69 படத்திற்கு விதிமுறைகளையும் தாண்டி நவம்பர் மாதம் ஷூட்டிங் எடுக்க உள்ளனர். அதற்கு பல காரணங்களை கூறுகின்றனர். அதில் முக்கியமாக அவர்கள் கூறும் காரணம் மெய்யனூரில் பெப்சிக்கு கொடுத்த இடத்தில் செட்டு போட்டுள்ளனர்.

நினைத்திருந்தால் தயாரிப்பாளர் வெளிமாநிலத்தில் செட்டு போட்டு எடுத்திருக்கலாம். ஆனால் நமது மாநிலத்தில் எடுக்க வேண்டும் என நினைக்கிறார். அவருக்கு உதவி செய்வதில் தப்பு இல்லை. எனவே ஷூட்டிங் நடத்திக் கொள்ளுங்கள் என கூறி விட்டார்களாம்.
