விவாகரத்துல எனக்கு இஷ்டம் இல்ல.. நிறைய பேர் அந்த ரீசனுக்காக சேர்ந்து வாழறாங்க.. திருமணம் பற்றி வெளிப்படையாக பேசிய த்ரிஷா…!!

By admin on ஐப்பசி 9, 2024

Spread the love

பிரபல நடிகையான திரிஷா முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். திரிஷாவுக்கு 41 வயது ஆகிறது. ஆனால் இன்னும் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரும் என்பவருடன் த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.

   

ஆனால் ஒரு சில காரணங்களால் திருமணம் நடக்கவில்லை. பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலம் கம் பேக் கொடுத்த த்ரிஷா இப்போது சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் திரிஷா நடித்த பேட்டியில் திருமணம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த திரிஷா எனக்கு உண்மையாவே தெரியல.

   

 

அது எல்லாமே நான் யாரு கூட இருக்கிறேன், யாரை பார்க்கிறேன் அப்படிங்கறதுல தான் இருக்கு. இவங்க கூட என்னோட வாழ்நாள் முழுவதையும் ஷேர் பண்ணிக்க போறேன் அப்படிங்கறதுல தான் இருக்கு. ஏன்னா எனக்கு விவாகரத்தில் நம்பிக்கை இல்ல. எனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னா நான் டிவோர்ஸ் அப்படிங்கிற ஒரு முடிவு எடுக்க மாட்டேன். நான் நிறைய தம்பதிகளை பார்த்து இருக்கேன்.

அவங்க நிறைய ரீசனுக்காக சேர்ந்து வாழறாங்க. என்னோட ஒரு சில பிரெண்ட்ஸ் சந்தோஷமா இல்ல. அவங்க ஆனா சேர்ந்து தான் இருக்கிறார்கள். அதுக்கு குழந்தைகள், குடும்பம் எல்லாமே ஒரு காரணம்தான். எனக்கு மேரேஜ் லைப் அந்த மாதிரி இருக்கிறது பிடிக்காது. நான் ஒரு நல்ல லைப்க்காக காத்துட்டு இருக்கேன். ஒரு நல்ல பர்சன் என் லைஃப்ல வரும்போது அது நடக்கும். அது நடக்கவில்லை என்றாலும் நான் அத பத்தி கவலைப்பட மாட்டேன். என் வாழ்கையில் அது நடக்கல அவ்ளோதான் என ஓப்பனாக பேசியுள்ளார்.