Categories: சினிமா

“தலைவர் 170” படத்தின் டைட்டில் இது தானா?… பெயரே வெறித்தனமா இருக்கே.. ரஜினி ரசிகர்களுக்கு சூப்பரான அப்டேட்…!!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே  திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே சூப்பர் ஸ்டார் இமயமலைக்கு கிளம்பிவிட்டார். சுமார் நான்கு வருட இடைவேளைக்குப் பிறகு இமயமலை செல்லும் ரஜினி இப்போது மிகவும் புத்துணர்ச்சியோடு இருக்கிறார்.

தற்போது ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரஜினி அதற்கு அடுத்தபடியாக தற்போது ராஞ்சிக்கு சென்றுள்ளார். இந்த ஆன்மீக சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு ரஜினி சென்னை திரும்பியதும் ஜெய்லர் திரைப்பட வெற்றி விழாவை கொண்டாட உள்ளார். அதன் பிறகு ரஜினியின் 170 ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இந்த படத்தை இயக்க உள்ளார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. மேலும் தலைவர் 170 படத்துக்கு அனிருத் இசை அமைக்க உள்ள நிலையில் ரஜினியுடன் அமிதாப்பச்சன், மலையாள நடிகை மஞ்சு வாரியார், பகத் பாஸில் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் தலைவர் 170 படத்தின் டைட்டில் லீக் ஆகி உள்ளது. அதாவது இந்த படத்திற்கு வேட்டையன் என பேரிடப்பட்டுள்ளதாக தகவல் இணையத்தில் பரவி வருகின்றது. இதில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ள நிலையில் ரௌடிகளை வேட்டையாடும் கதாபாத்திரம் என்பதால் இதற்கு வேட்டையன் என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Nanthini

Recent Posts

“ஷாக்.. 4 மாதங்களாக ரகசிய பனி அறையில் இருந்த உடல்கள்…! – ஈரான் உச்ச தலைவரின் இறுதிச்சடங்கில்… உலகையே உலுக்கிய அந்த ஒரு சவப்பெட்டி…!!”

கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர்…

8 minutes ago

எடப்பாடிக்கு டெல்லி வைத்த செக்…. அதிமுக பொதுச்செயலாளராகும் டிடிவி தினகரன்?… பின்னணியில் இருக்கும் பாஜகவின் ரகசிய பிளான்… தமிழக அரசியலில் அடுத்த புயல்….!

தேர்தல் தோல்விக்குப் பின்பும் டிடிவி தினகரன் அதிமுகவை ஆதரிப்பதன் பின்னணியில் வலுவான அரசியல் கணக்குகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.…

12 minutes ago

“விஜய் ஆட்சிக்கு 6 மாதமே கெடு.. அப்புறம் ஆட்சி இருக்காது – இருக்கவும் விடமாட்டோம்”… நடுங்க வைக்கும் அனிதா ராதாகிருஷ்ணனின் பகிரங்க சவால்…..!

தமிழக முதல்வர் விஜய் பற்றி பொது மேடையில் அவதூறாகப் பேசியதாகக் கூறி, திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா…

25 minutes ago

“நேரம் மிச்சமாச்சு… ஆனா நிம்மதி போச்சு…!” – வொர்க் ஃபிரைம் ஹோம்… மறுபக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய இளைஞர்… சமூக ஊடகங்களில் டிரெண்டாகும் வீடியோ…!!

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவைப் பற்றியது இந்த செய்தி. அதில், 'வொர்க் ஃபிரைம் ஹோம்' என்பது பலருக்குக்…

26 minutes ago

“வினை விதைத்தவன் வினை அறுப்பான்…!” – திமுக ‘ஊழல் பெருச்சாளி’ என கிழித்து தொங்கவிட்ட வைகோ…! தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு…!!

தமிழக முதலமைச்சர் விஜய் ஊழலற்ற மற்றும் நேர்மையான ஆட்சியை நடத்தி வருவதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ…

35 minutes ago

“நாங்க பண்ண தப்பு இதுதான்”… அதிமுகவில் அடுத்த பிளான் ரெடி… மாவட்டந்தோறும் களமிறங்கும் புதிய படை…. EPS போட்ட ரகசிய உத்தரவு கசிந்தது….!

அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தமிழக அரசியல் களம் மற்றும் கட்சியின் எதிர்கால வியூகம்…

37 minutes ago