மலையாள சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவர் மோகன்லால். இவர் மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார். இதுவரை 350 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
நடிகர் மோகன் லால் மலையாள சினிமா ரசிகர்கள் மட்டுமே ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார். தமிழில் இவர் உன்னை போல் ஒருவன், ஜில்லா, காப்பான் என பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வரும் இவர் தற்பொழுது ராம் முதல் பாகம், மலைக்கோட்டை வாலிபன், Barroz: Guardian of D’Gama’s Treasure பல படங்களை கைவசம் வைத்து பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
கடந்த 2012-ல் மோகன்லாலுக்கு சொந்தமான வீடுகளிலும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் இரண்டு யானை தந்தங்கள் பதுக்கி வைத்து இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். பின்னர் அவை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. விலங்குகள் பாதுகாப்பு சட்டத்துக்கு விரோதமாக யானை தந்தங்களை பதுக்கியதாக மோகன்லால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கோர்ட்டில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது . இந்த நிலையில் யானை தந்தம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மோகன்லால் வருகிற நவம்பர் 3-ந்தேதி கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று பெரும்பாவூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். வழக்கை திரும்ப பெறக்கோரி மாநில அரசு தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தார். தற்பொழுது இந்த வழக்கு விசாரணை இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…