படப்பிடிப்பு தளத்தில் மாஸ்ஸாக கிரிக்கெட் விளையாடிய தல அஜித்…. வைரலாகும் UNSEEN வீடியோ இதோ…

நடிகர் அஜித் படப்பிடிப்பு தளத்தில் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான ‘வலிமை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. வசூலையும் வாரிக் குவித்தது. தற்போது இவர் இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் ‘துணிவு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்

இத்திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துணிவு படத்தினைத் தொடர்ந்து இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘ஏகே 62’ என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடைந்துள்ளது.

நடிகர் அஜித் பற்றிய புகைப்படங்களோ அல்லது வீடியோக்களோ சமூகவலைத்தளங்களில் வெளியானால் அது உடனே வைரலாகி விடும். அந்த வகையில் தற்பொழுது ‘தல 56’ படப்பிடிப்பு தளத்தில் நடிகர் அஜித் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தற்பொழுது இந்த வீடியோ அவரது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த வீடியோ….