நடிகை ஸ்ரீதேவியின் மகளா இவர்?… ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு இவ்வளவு பெருசா வளந்துட்டாங்களே?… நீங்களே பாருங்க…

நடிகை ஸ்ரீதேவியின் மகளின் சமீபத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல குணச்சித்திர நடிகர் விஜயகுமாரின் மகள்களில் ஒருவர் ஸ்ரீதேவி. ‘ரிக்சா மாமா முதல் ஆவாரம் பூ’ வரை குழந்தை நட்சத்திரமாக 6 படங்களில் நடித்துள்ளார். பிறகு இவர் 2002ல் வெளியான ‘ஈஸ்வர்’ என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் கதாநாயகி அறிமுகமானார்.

நடிகை ஸ்ரீதேவி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் நாயகியாக நடித்த  காதல் வைரஸ், பிரியமான தோழி, தித்திக்குதே, தேவதையை கண்டேன் திரைப்படங்களின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். இவர் 2009ல் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 2016ல் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

இந்த குழந்தைக்கு ரூபிகா என பெயர் வைத்தார். திருமணத்திற்கு பின்னரும் ஸ்ரீதேவி ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை ஸ்ரீதேவி. அவ்வப்போது தனது புகைப்படங்களை இணையதளப் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவி தனது மகளுடன் நத்தார் பண்டிகைக்காக கிறிஸ்துமஸ் மரம் ஒன்றை தயார் செய்யும் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் தனது மகளுடன் இணைந்து கிறிஸ்துமஸ் மரத்தை தயார் செய்கிறார்.

இந்த வீடியோவினை பார்த்த ரசிகர்கள் ‘நடிகை ஸ்ரீதேவியின் மகளா இவர்? இவ்வளவு பெருசா வளந்துட்டாங்களே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ….