சென்னை கொடுங்கையூர் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து நடத்துநர் ஒருவர் இளைஞர் கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேவர் ஜெயந்தியின் போது, தற்காலிக நடத்துநரான நித்திய நாதனின் நண்பருக்கும் மற்றொரு கும்பலுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இதற்குப் பழிவாங்கும் விதமாக, கடந்த 13-ஆம் தேதி மாலை பட்டப்பகலில் கொடுங்கையூர் பேருந்து நிலையத்திற்கு வந்த அந்தக் கும்பல், நடத்துநர் நித்திய நாதனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடியது. இச்சம்பவத்தை நேரில் கண்ட பயணிகள் அலறியடித்துக் கொண்டு சிதறி ஓடிய நிலையில், இது தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இத்தாக்குதலில் படுகாயமடைந்த நடத்துநர் நித்திய நாதன் உடனடியாக மீட்கப்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காகச் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்; தற்போது அவர் நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பேருந்து ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில் கொடுங்கையூர் காவல்துறையினர் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இவ்வழக்கில் தொடர்புடைய இருவரைக் காவல்துறையினர் ஏற்கனவே கைது செய்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மற்றவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டாவில், மாமியாரின் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு ஆற்றங்கரையில் முகம் கழுவச் சென்ற மருமகனை ராட்சத முதலை…
அசாம் மாநிலம் திப்ருகரில் ஆன்லைன் விளையாட்டில் ரூ.4 லட்சம் பணத்தை இழந்த வாடகைதாரர் ஒருவர், தனது கடனை அடைப்பதற்காக வீட்டின்…
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்திலுள்ள பைதான் பகுதியில், பெற்ற தந்தையே தனது இரண்டு மகன்களைக் கால்வாயில் வீசிய கொடூரச்…
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றிய மியா அசெவெடோ கல்லார்டோ (20) என்பவர், 17 வயது…
பீகார் மாநிலம் பெட்டியாவில் பட்டப்பகலில் பிரபல நகைக்கடைக்குள் துப்பாக்கியுடன் புகுந்த 6 முதல் 8 பேர் கொண்ட மர்ம கும்பல்,…
திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் பகுதியில் 80 வயது மூதாட்டி ஒருவர் நவம்பர் 16-ஆம் தேதி அதிகாலை 5.45 மணியளவில் இயற்கை…