BREAKING: தமிழகத்தில் சற்றுமுன் பள்ளி வேனில் பயங்கர தீ விபத்து… 20 மாணவர்களின் நிலை… பெரும் பரபரப்பு…!

By Nanthini on கார்த்திகை 21, 2025

Spread the love

மதுரை திருமங்கலத்தில் தனியார் பள்ளி வேனில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மற்றும் திருமங்கலம் ஹைவேயில் 20 மாணவர்களுடன் சென்ற வேனில் திடீரென்று தீப்பற்றியது. இதனை அறிந்த ஓட்டுநர் உடனே துரிதமாக செயல்பட்டு மாணவர்களை கீழே இறக்கி விட்டதால் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை. ஆனாலும் பள்ளி வேன் முழுவதும் எறிந்து சேதமானது. பள்ளி மாணவர்கள் செல்லும் வேன், பஸ்களை சரியாக பராமரிக்க வேண்டும் என்று தொடர்ந்து பெற்றோர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் தற்போது இந்த சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.