CINEMA
20 கோடிக்காக தமிழை விட்டுட்டு அக்கட தேசத்துக்கு போன அஜித்.. அது சரி பணம் பாதாளம் வரைக்கும் பாயும்னு சொல்லுவாங்க..!!
இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். கடந்த சில மாதங்களாக விடாமுயற்சி படத்தின் சூட்டிங் அர்பைஜான் நாட்டில் நடைபெற்றது. தற்போது சில காரணங்களுக்காக ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக எல்ரெட் குமார் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாக பேசப்பட்டது. ஆனால் அதற்குள் அஜித் நடிக்கும் 63-வது படத்தின் அப்டேட் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 63 வது படத்திற்கு குட் பேட் அக்லி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதனை தெலுங்கு முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு தேவி ஸ்ரீ பிரசாத் பிரசாத் இசையமைக்க உள்ளாராம். தற்போது தெலுங்கு தயாரிப்பு நிறுவனத்திற்கு அஜித் ஏன் ஓகே சொன்னார் என்ற தகவல் வெளியானது.
அதாவது எல்ரெட், வெற்றிமாறன் கூட்டணியில் அஜித் நடிக்கும் படத்திற்கு அவருக்கு 143 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டதாம். ஆனால் அதைவிட 20 கோடி ரூபாய் அதிகமாக கொடுத்து தெலுங்கு முன்னணி தயாரிப்பு நிறுவனம் குட் பேட் அக்லி படத்திற்கு அஜித்தை பேசி முடித்து விட்டார்களாம். இந்த படத்திற்கு அஜித்திற்கு 163 கோடி சம்பளம் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.