தமிழ் சினிமாவில் மணிரத்னத்துக்குப் பிறகு உயர் மத்தியதர வர்க்க இளைஞர்களின் வாழ்க்கை மிகவும் ஸ்டைலிஷாக படமாக்கி ரசிகர்களைக் கவர்ந்தவர் கௌதம் மேனன். அவர் மாதவன், ரீமா சென் ஆகியோர் நடிப்பில் உருவான மின்னலே படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றது.
அதன் பின்னர் அவர் இயக்கிய காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் கவனிப்பைப் பெற்றன. தன்னுடைய சில ஹிட் படங்களை அவர் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்தார்.
அப்படி தன்னுடைய முதல் படமான மின்னலே படத்தை இந்தியில் மாதவன் மற்றும் சாயிப் அலிகான் ஆகியோர் நடிப்பில் ரீமேக் செய்தார். இந்த படத்தை வாஷு பக்னானி தயாரித்திருந்தார். முதலில் இந்த படத்தை இயக்க கௌதம் மேனன் விரும்பவில்லையாம். ஆனால் மாதவன்தான் பெரிய தயாரிப்பாளர் என சொல்லி அவரை சம்மதிக்கவைத்துள்ளார்.
படத்தை இயக்கிய போது மும்பையில் நடப்பது போன்ற கதையை டர்பன் நகரில் வைத்து ஷூட் செய்து மேட்ச் செய்ய சொல்லியுள்ளனர். இது கௌதம் மேனனுக்கு பிடிக்கவில்லையாம். ஆனால் வெளிநாட்டில் ஷூட் வைத்தால்தான் சைஃப் அலிகான் ஒழுங்காக ஷூட் வருவார் என்று சொல்லி அழைத்து சென்றுள்ளனர்.
படத்தில் ஏற்கனவே ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் படத்தில் இருந்த 6 பாடல்கள் இல்லாமல் வேறு 6 பாடல்களையும் அவரே சென்று ஷூட் செய்துள்ளார். ஏனென்று கேட்டால் பாடல்களுக்கு என்று மிகப்பெரிய வியாபாரம் இருக்கிறது என சமாதானம் சொல்லியுள்ளனர்.
இது எதுவுமே பிடிக்காமல்தான் கௌதம் அந்த படத்தை எடுத்துக் கொடுத்தாராம். எப்படியாவது படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு ஆளைவிட்டால் போதுமென்றுதான் ஓடிவந்தாராம். எதிர்பார்த்தது போலவே அந்த திரைப்படம் ஹிட்டாகவில்லை. அதன் பிறகு பல ஆண்டுகளுக்குப் பின்னர் விண்ணைத்தாண்டி வருவாயா ரீமேக்கான ஏக் தீவானா தா என்ற படத்தை ரீமேக் செய்தார். அந்த படமும் சரியாக போகவில்லை.