“நான் அவன் கூட ஜாலியா இருக்கனும்”… தடையாக இருந்த கணவன்… ஜேசிபி மிஷினை கையில் எடுத்த தெலுங்கானா கல்பனா… அடுத்து நடந்த கொடூரம்….!

Spread the love

தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டியில் கள்ளக்காதலுக்காக கணவனைக் கொடூரமாகக் கொலை செய்து, ஜே.சி.பி எந்திரம் மூலம் உடலைப் புதைத்த மனைவியின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சங்காரெட்டி மாவட்டம் கங்காபூரைச் சேர்ந்த முத்தியம் ரெட்டி – கல்பனா தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கல்பனா நாராயன்கேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தபோது, அங்கு வேலை செய்த சிண்டு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

தங்களது கள்ளத்தொடர்பிற்கு கணவர் முத்தியம் ரெட்டி இடையூறாக இருப்பதாகக் கருதிய கல்பனா, அவரைத் தீர்த்துக்கட்ட தன் காதலனுடன் சேர்ந்து ரகசியமாகத் திட்டம் தீட்டினார். இதற்கான சரியான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியிருந்த கல்பனா, சில நாட்களுக்கு முன்பு காதலன் சிண்டுவின் உதவியுடன் கணவரைத் கொடூரமாகக் கொலை செய்தார். பின்னர் யாருக்கும் சந்தேகம் வராதபடி, ஒரு மைதானத்தில் ஜே.சி.பி எந்திரத்தின் துணையோடு குழி தோண்டி அவரது உடலை ரகசியமாகப் புதைத்துவிட்டு, கணவரைக் காணவில்லை என்று போலீசில் நாடகமாடி புகார் அளித்துள்ளார்.

வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய போலீசாருக்கு, கல்பனாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் நடத்தப்பட்ட தீவிர மற்றும் துருவித் துருவி கேட்கப்பட்ட விசாரணையில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, கல்பனா அடையாளம் காட்டிய மைதானப் பகுதியிலிருந்து முத்தியம் ரெட்டியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. இந்த கொடூரக் குற்றத்திற்காக கல்பனா மற்றும் அவரது காதலன் சிண்டு ஆகிய இருவரையும் போலீசார் உடனடியாகக் கைது செய்தனர்.

இந்தக் கொலை சம்பவத்தில் ஜே.சி.பி எந்திரத்தை வரவழைத்துக் கொடுத்தது யார், இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்ற கோணங்களில் போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட விரிசலைச் சரி செய்யாமல், பெற்ற பிள்ளைகளையும் மறந்து, காதலனுக்காகக் கணவனையே கொன்ற கல்பனாவின் கல்நெஞ்சக் காரியம் சமூக வலைத்தளங்களில் கடுமையான கண்டனங்களை ஆளாக்கியுள்ளது. இதுபோன்ற கொடூரக் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கொந்தளிப்புடன் வலியுறுத்தி வருகின்றனர்.

Nanthini

Recent Posts

தமிழகத்தில் மீண்டும் கொடூரம்.. 61 வயது மூதாட்டி கூட்டுப்பாலியல் வன்கொடுமை… பயங்கர அதிர்ச்சி..!!

சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…

6 மணத்தியாலங்கள் ago

BREAKING: உடனே மூடுங்க.. முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு…!!

மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…

6 மணத்தியாலங்கள் ago

FLASH: அரசு எச்சரிக்கையை மீறி கூடுதல் கட்டணம் வசூல்… டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடி கைது..!!

மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…

6 மணத்தியாலங்கள் ago

BREAKING: “சிங்கப்பெண் அதிரடிப்படை” திட்டத்தின் தொடக்க விழா ரத்து…!!

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…

6 மணத்தியாலங்கள் ago

வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் வீதிமன்றப் போராட்டம்..! புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு.. அரசு ஊழியர்கள் சங்கம் கெடு…!!

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…

7 மணத்தியாலங்கள் ago

அரசியலை கடந்த பாசம்..! சீமான் வீட்டுக்கு அண்ணனாகச் சீர் கொண்டு சென்ற அனிதா ராதாகிருஷ்ணன்..! நெகிழ வைக்கும் பின்னணி…!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…

8 மணத்தியாலங்கள் ago