மனைவியை கொன்ற கணவர்.. கடைசியாக நண்பனுக்கு போன் போட்டு சொன்ன அதிர்ச்சி தகவல்… அடுத்த நொடியே நடந்த பயங்கரம்…!

Spread the love

டெல்லிக்கு அருகே உள்ள குருகிராம் என்ற பகுதியில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் ஒரு தொழில்நுட்ப நிபுணர் தன்னுடைய மனைவியை கொலை செய்த பிறகு தன்னுடைய நண்பரிடம் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று தொழில்நுட்ப ஊழியருக்கும் அவருடைய மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற கணவன் தனது மனைவியை தாக்கி அடித்துள்ளார்.

இதனால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். கொலையை செய்த பிறகு உடனடியாக தன்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவருக்கு தொலைபேசி அழைத்து ஒரு அதிர்ச்சி தகவலை பகிர்ந்து உள்ளார். தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர், நான் என்னுடைய மனைவியை கொன்றுவிட்டேன், நானும் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார். இந்த தகவலை கேட்டு பதறிப் போன அவருடைய நண்பர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

இதனால் உடனே சம்பவிடத்திற்கு விரைந்த போலீசார் வீட்டுக்குள் நுழைந்தபோது மனைவியை ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த நிலையில் அங்கே கணவர் உயிரோடு இருந்துள்ளார். அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா அல்லது மன அழுத்தத்தில் இருந்தாரா என்பது தெளிவாக தெரியவில்லை. இருந்தாலும் உடனே அவரை கைது செய்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சனை மற்றும் தனிப்பட்ட மனக்கசப்புகள் நீண்ட நாட்களாக இருந்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Nanthini

Recent Posts

“அவருக்கு பதவி கொடுத்தது ஏன்…?” எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்த அமைச்சர் நிர்மல் குமாரின் அதிரடி பதில்…!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ளது. ஆட்சி…

4 minutes ago

பள்ளி மாணவர்களின் அடையாள அட்டைகளில் இனிமேல் சாதிப் பெயர் இடம் பெறாது… அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் அடையாள அட்டைகளில் இனிமேல் சாதிப் பெயர் இடம் பெறாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடியாக…

18 minutes ago

“சினிமாவே வேண்டாம்…!” மக்கள் என்னை நிராகரிச்சிட்டாங்க…கண்ணீருடன் முடிவெடுத்த சமந்தா… தடுத்து நிறுத்திய அந்த ஒரு நபர்…!

நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி, திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்து வரும் திரைப்படம் 'மா இன்டி பங்காரம்'. சமந்தாவின்…

20 minutes ago

அப்படியே அம்மாவை காப்பி அடிக்கும் குட்டி..! சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் குரங்கின் வீடியோ…. பின்னணியில் இருக்கும் ஆழமான உண்மை.. வியந்துபோன நெட்டிசன்ஸ்..!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு குரங்கின் வீடியோ, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு எப்படி முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற…

23 minutes ago

இது வெறும் சூட்கேஸ் இல்ல.. உள்ளே இருந்த பொருள்… மருமக்களுக்காக மாமியார் செய்த செயல்.. இப்படியொரு மாமியார் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்… நெட்டிசன்கள் நெகிழ்ச்சி…!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மாமியார், பெங்களூருவில் வசிக்கும் தனது மருமகளுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற மற்றும் அவருக்குப் பிடித்தமான…

26 minutes ago

குடும்ப அட்டைதாரர்களே உஷார்..! 35 கிலோ ரேஷன் கிடைக்காதா..? விதியில் புதிய மாற்றம்.. மத்திய அரசின் அதிரடி வரைவு..!!

மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான புதிய…

30 minutes ago