இமாச்சலப் பிரதேசத்தில் அரசு பள்ளியில் ஆசிரியர்கள் 8 வயது தலித் மாணவனை கொடூரமாக நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் சிம்லாவில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட மூன்று ஆசிரியர்கள் சுமார் ஒரு வருடமாக 1 ஆம் வகுப்பு பயின்று வரும் அந்த சிறுவனை தொடர்ந்து அடித்து துன்புறுத்தி உள்ளனர். இது தொடர்பாக சிறுவன் ஒரு கட்டத்தில் பெற்றோரிடம் கூறியதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அளித்த புகாரியின் அடிப்படையில் தலைமை ஆசிரியர் மற்றும் 2 ஆசிரியர்கள் மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமைகள் தடுப்பு சட்டம், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டதில் அந்த சிறுவனின் காதில் ரத்தம் வந்ததுடன் செவி பறையும் சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதோடு ஆசிரியர்கள் சிறுவனை பள்ளி கழிவறைக்கு அழைத்துச் சென்று அவனது கால் சட்டையில் ஒரு தேளை போட்டுள்ளனர். இந்த சம்பவங்களை வெளியில் சொன்னால் கைது செய்யப்படுவாய் அல்லது சுட்டுக் கொல்லப்படுவாய் என்று ஆசிரியர்கள் சிறுவனை மிரட்டி உள்ளன.
மேலும் பெற்றோர் இது குறித்து புகார் அளித்தால் அல்லது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டால் வாழ்க்கையை தொலைத்து விடுவீர்கள் என்றும் மிரட்டி உள்ளனர். பள்ளியில் சாதி ரீதியான பாகுபாடு காட்டப்படுவதாகவும் ராஜபுத்திர சமூக மாணவர்களிடமிருந்து தலித் மாணவர்கள் உணவருந்தும்போது தனியாக பிரித்து வைக்கப்படுவதாகவும் சிறுவனின் பெற்றோர் புகார் அளித்துள்ள நிலையில் இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி அருகே அரசுப் பணியை முடித்துத் திரும்பிய பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை அளித்த சிறப்பு உதவி ஆய்வாளர் கைது…
சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழக அரசியலில் இதுவரை எந்த ஒரு தலைவருக்கும் இல்லாத வகையில்…
மதுரை முன்னாள் துணை மேயரும், அதிமுக கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளருமான பி.எம். மன்னன், தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.30…
மேற்கு வங்க மாநிலம் தெற்கு தினாஜ்பூர் மாவட்டம் கங்காராம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரிண்டு சர்க்கார் (46), அரசு பேருந்து நடத்துநராகப்…
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே மனைவியின் முன்னாள் காதலனுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் தகராறில், இருவரையும் சமாதானம் செய்யச் சென்ற நண்பர்…
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அகில் குமார் சந்தக் என்பவர், கடந்த 2019-ஆம் ஆண்டு டெல்லியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நூர்ஷிகா…