விழுப்புரம் நகரில் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வரும் நிலையில் அங்கு சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்தப் பள்ளியில் 48 வயதான பால் வில்சன் என்ற ஆசிரியர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஆறாம் வகுப்பில் பயிலும் ஒரு மாணவி கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்வதில் ஆர்வமில்லாமல் இருந்துள்ளார். முதலில் பெற்றோர் ஏன் பள்ளிக்கு செல்லவில்லை என்று கேட்டதும் எதுவும் கூறாமல் இருந்த அந்த மாணவி பிறகு பெற்றோரின் தொடர் விசாரணை மூலம் பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.
அதாவது பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் பால் வில்சன் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி கூறிய நிலையில் ஆசிரியர் கண்ட இடத்தில் தொட்டாறு, என்னால வழி தாங்க முடியல அம்மா என்று கூறி கதறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனே பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்த நிலையில் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிறகு ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பெற்றோர் தங்கள் உறவினர்களுடன் பள்ளிக்குச் சென்று பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியரை வெளியே இழுத்து வந்து கடுமையாக தாக்கியுள்ளனர். பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த ஆசிரியரை கைது செய்து தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
