CSK வில் அதிக சம்பளம் வாங்கும் வீரர் இவரா..? வெளியான பட்டியல்… எம்.எஸ் தோனியையும் முந்திட்டாரே…

By Srimathi on ஆவணி 30, 2025

Spread the love

இந்திய பிரீமியர் லீக் தொடரில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த 2 சீசன்களாக வெற்றி பெறவில்லை. 2025-ஆம் ஆண்டு சீசனுக்காக சென்னை அணி வீரர்களின் சம்பள பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி பத்தாண்டுகளுக்குப் பிறகு திரும்பியுள்ளார். மேலும் சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன், அஸ்வின் இருவரும் இரண்டு மடங்கு சம்பளம் அதிகம் பெறுவதாக பேச்சுவார்த்தை நிலவி வருகிறது. இவர்களுக்கு ரூ. 9.75 கோடி ஏலத்தில் எடுத்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் தெரிவித்தது. அதேசமயம் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி ரூ. 4 கோடி சம்பளத்திற்கு அன்கேப்ட் வீரராக தக்க வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு தலா 18 கோடியும், மதீஷ பத்திரனாக்கு  ரூ.13 கோடியும், சிவம் துபேக்கு  12 கோடியும் வழங்கப்பட உள்ளது. இது அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இளம் மற்றும் தற்போதைய பார்மில் உள்ள வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதை காட்டுகிறது. எம்.எஸ்.தோனி ஒரு வீரராக மட்டுமின்றி, ஒரு ஆலோசகராகவும் அணியில் செயல்படுகிறார். அணியின் நிதி சமநிலையை வலுப்படுத்தவும், மற்ற வீரர்களுக்கு அதிக தொகை செலவிட வழி வகுக்கவும், தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டதாக குறிப்பிடுகிறார். இந்த ஐபிஎல் தொடருக்குப் பிறகு, ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்துள்ள நிலையில், இந்த மறுபிரவேசம் முக்கியத்துவம் பெறுகிறது.