உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி புர்கா அணிந்த ஒரு இளம்பெண் தில்பந்தேஸ்வர் பாதையில் உள்ள சந்து வழியாக சந்தைக்குச் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ஸ்கூட்டரில் பின்னால் வந்த ஒரு வாலிபர், அந்தப் பெண்ணை தவறாக தொட்டு ஆபாசமாக பேசிவிட்டு அங்கிருந்து வேகமாக தப்பி சென்று விட்டார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் தன்னுடைய வீட்டுக்குச் சென்று பெற்றோரிடம் நடந்ததை கூறி கதறி அழுத்துள்ளார்.
உடனே பெண்ணின் குடும்பத்தினர் குற்றவாளியை கண்டறிய தீவிரமாக தேடிய நிலையில் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட காட்சிகள் பதிவாகி இருந்தது. அதை வைத்து வாரணாசியை சேர்ந்த தன்வீர் அக்தர் என்ற நபரை கண்டறிந்தனர். அவரின் வீட்டுக்கு சென்ற பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை வெளியே இழுத்து வந்து கடுமையாக தாக்கினர்.
இதில் பாதிக்கப்பட்ட அந்த பெண் நபரின் முகத்தில் அறைந்து இனிமேல் எந்த பெண்ணிடம் ஆவது இப்படி நடந்து கொள்வாயா என்று அடித்துள்ளார். அது தொடர்பான வீடியோவும் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில் அந்த நபரை கைது செய்துள்ள போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
