நிச்சயிக்கப்பட்ட திருமணம்… ஆசை வார்த்தை கூறி மாணவியுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியர்.. அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்…!

By Srimathi on ஆவணி 15, 2025

Spread the love

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பிரவீன் (45), தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி, இரு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், அதே கல்லூரியில் படிக்கும் மாணவிக்கும், பிரவீனுக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலில் முடிந்தது. இது மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்து, அவர்கள் பிரவீனை கண்டித்தனர். பின் அந்த மாணவிக்கு திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்தனர்.

திருமணத்திற்கான நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்த நிலையில், கடந்த 2 ஆம் தேதி, பிரவீன் மாணவியுடன் ஓட்டம் பிடித்தார். மாணவியை பல இடங்களில் தேடிய பெற்றோர், அவர் கிடைக்கவில்லை என்று பெரும் கவலை அடைந்தனர். அக்கம்பக்கத்தினரிடம் மாணவியை பற்றி விசாரிக்கையில், மாணவி பேராசிரியருடன் ஓடியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து,  தொட்டபள்ளாப்புரா மகளிர் காவல் நிலையத்தில், பெற்றோர்கள் புகார் அளித்த நிலையில், போலீசார் பிரவீனை கைது செய்து, மாணவி மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.