தாய்ப்பால் குடிக்கும் போதே உயிரிழந்த பச்சிளம் குழந்தை… நெஞ்சை கரைய வைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

By Srimathi on ஆவணி 15, 2025

Spread the love

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர், வேம்பரசன். வேம்பரசனின் மனைவிக்கு கடந்த 3 வாரங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்ததால், வேம்பரசனின் மனைவி அதற்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது, குழந்தைக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக குழந்தையை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது